Sunday, November 08, 2009

செகண்ட் ஹேன்ட் பொண்ணு வேண்டாம்!

சிவராமன் பையனுக்கு பெண் பார்க்க வெளியூர் புறப்பட்டார்.
பையன் பிசினஸ் விஷயமாக வேறே ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்பாவிடம் விவரமாகப் பேச நேரமில்லாததால்,
“இதுல எல்லாம் எழுதியிருக்கேன்” என்று ஒரு காகிதத்தைக் கொடுத்து விட்டு அவசரமாகப் புறப்பட்டான்.
பிரித்துப் பார்த்த சிவராமனுக்கு தலை சுற்றியது.
கலர் முக்கியம். கருப்பு வேண்டாம்.
கூடுமானவரை செகண்ட் ஹான்ட் வேண்டாம். ஒருக்கால் செகண்ட் ஹேண்டாக இருந்தால் போர் தேய்ந்திருக்கக் கூடாது.
இரண்டு ஹெட் லைட்டுகளும் பெரிதாகவும், முன்புறம் குவிந்தும் இருக்க வேண்டும். மத்தியில் கறுப்புப் பொட்டு ரொம்பப் பெரிதாக வேண்டாம்.
சீட்டுகள் பெரிதாக மெத்மெத்தென்று இருக்க வேண்டும். கிழிந்திருக்கக் கூடாது.
உட்புறம் பிண நாற்றம் அடிக்கக் கூடாது, மெல்லிய நறுமணம் இருந்தால் நல்லது.
யாராவது டெஸ்ட் டிரைவ் செய்து உட்புறத்தை அசுத்தப் படுத்தி இருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும்.
ஒழுகுகிறதா என்று அடிப்பாகத்தைக் குனிந்து பார்த்து நிச்சயிக்க வேண்டும்.
மொபைலில் பையனைப் பிடித்த அவர், “என்னடா இதெல்லாம்?” என்றார் அதிர்ச்சியுடன்.
“சாரிப்பா, கார் ஒண்ணு வாங்கணும். நம்ம டிரைவர் கிட்டே குடுக்கிறதுக்காக வெச்சிருந்தேன். மாறிப் போச்சு”

உங்களால சிரிக்க

“வீட்டிலே வேலைக்காரியும் நீங்களும் மட்டும் இருக்கிறப்போ எதுவும் போடாம குறுக்கும் நெடுக்கும் உலாத்தி இருக்கீங்க. உங்களுக்கு ஏன் இந்த மானம் கெட்ட பிழைப்பு?”
“ஒண்ணும் போடாமயா? பச்சைப் புளுகு. கூப்பிடு அந்தக் கழுதையை”
“என்ன புளுகு? நீங்க என்ன போட்டிருந்தீங்க?”
“காண்டம்”_________________________________________________________________________________“ஒரு அழகான பெண்ணோட ராத்திரி பூரா தனியா இருக்கச் சொன்னாலும் எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்”
“என் கசின் ஒருத்தனுக்கு இதே மாதிரி இருந்திச்சு. இப்ப குணமாயிடிச்சு”_________________________________________________________________________________“எங்க காலேஜிலே பாலியல் கல்வி சொல்லித் தரப் போறாங்க”
“பிராக்டிகல்ஸ் உண்டா?”

Wednesday, October 14, 2009

யோசிக்கட்டும் ஊடகங்கள்.

நடிகை புவனேஸ்வரி விபச்சாரத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் சமாச்சாரம். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்….. ஆக்கக் கூடாது என்கிற வாதங்களைத் தாண்டி நமக்கு வருகின்ற கோபமெல்லாம் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மீதுதான். ஆடம்பரங்களுக்காக இப்படிப் போனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் பிழைக்க வேறு வழியே கிடைக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக இதைத் தேர்ந்தெடுத்து உயிர்வாழும் பெண்களைப் படம் பிடித்து “பிடிபட்ட விபச்சார அழகி இவள்தான்” என வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் நமது கோபம். அப்படிப் படம் போடும் பத்திரிக்கைகள் அவர்களோடு உறவு கொண்ட பெரிய மனிதர்களைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறதா? என்பதுதான் நமது கேள்வியே. பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்ணுக்குப் பெயர் விபச்சாரி என்றால்…. பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு என்ன பெயர்?

”பிடிபட்ட அப்பெண்ணுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்…அவருக்கு பள்ளிக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருக்கக்கூடும்….. புகைப்படம் போட்டால் அவரது குடும்பமே துயரத்துக்கு உள்ளாகும்” என்கிற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இந்த நான்காவது தூணுக்கு இல்லாமல் போனது வெட்ககரமான விஷயம்.
நடிகர் ஜெமினி கணேசன் பலதார மணம் செய்தால் அவருக்குப் பெயர் காதல் மன்னன். அதே வேலையை ஜெயலட்சுமி செய்தால் வேறு பெயரா?
ஜெமினி செய்தால் தொலைக்காட்சியில் “ஸ்டாருடன் ஒரு நாள்” என ஒளிபரப்பாகும்……
அதையே ஜெயலட்சுமி செய்தால் “குற்றம் நடந்தது என்ன?” என்று ஒளிபரப்பாகும்……..
என்ன நீதி இது?

Thursday, September 03, 2009

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன?

ஒரு 21 வயசு பொண்ணு [ஜொள்ளர்ஸ் வழியாதிங்க] தனியா ஒரு ஊரில இருந்து இன்னொரு ஊருக்கு காரில போய்ட்டு இருந்திருக்கு. இருட்டின நேரம், காத்தும் பலமா அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. அந்த நேரம் பார்த்து கார் டக் டக் டக் டக் என்று சத்தம் போட்டுட்டே நின்னிட்டுது. மழை வேற...தூரத்தில ஒரு வீடு தெரிஞ்சுது. சரி அங்க போய்ட்டு உதவி கேக்கலாம்னு சொல்லிட்டு அந்த பொண்ணு வீட்டை போய் தட்டிடிச்சு. ஒரு நடுத்தர வயதுள்ள கணவன், மனைவி கதவை திறந்தாங்க. நடந்தது தெரிஞ்சதும், சரி எங்க கூடவே தங்கிட்டு காலைல போகலாம் அப்படின்னாங்க. வீடு ரொம்ப பெரிசா இருந்திச்சுது. தம்பதிகளை தவிர வேற யாருமே கண்ணில படலை. அந்த இரவு நேரத்தில கூட நல்ல சாப்பாடு பரிமாறினாங்க அந்த பொண்ணுக்கு. மேல போய் தூங்கிக்கோ ஆனா தெற்கால இருக்கிற அறை பக்கம் போக வேணாம் அப்படி சொன்னாங்களாம். இந்த பொண்ணும் சரின்னு சொல்லிட்டு போய் தூங்கிடிச்சு. இரவு 2மணி போல தாகம் எடுத்ததும், தண்ணி எங்க இருக்கும்னு தேடி போகும் போது சரி அந்த அறையில அப்படி என்ன இருக்குன்னு சாவி போடுற இடத்தில பார்த்திருக்கு. அறையில ஒரு சின்ன பொண்ணு சுவரை பார்த்தபடி உட்கார்ந்திருக்கு. அடப்பாவிகளா நல்லவங்க போல நடிக்கிறாங்க ஆனா ஒரு சின்ன பொண்ணை அடைச்சு வச்சிருக்காங்களேன்னு நினைச்சிட்டே தூங்க போய்ட்டாங்க. மறுபடி 4 மணி போல கழிவறைக்கு போக வேண்டி வந்திடிச்சு. சரி எழுந்திட்டம் அந்த சின்ன பொண்ணு என்ன தான் பண்ணுதுன்னு பார்க்கலாமேன்னு நினைச்சிட்டு மறுபடி சாவிதுவாரத்தால பார்த்திருக்கா. அப்போ எதுவுமே தெரியலை. சிவப்பு நிறம் மட்டும் தெரிஞ்சிருக்கு. அட முன்னாடி பார்க்கும் போது இருந்த சின்ன பொண்ணு எங்கேன்னு நினைச்சிட்டே தூங்கா போய்ட்டா.காலை நேரம்...தம்பதிகள் நல்ல உணவு சமைச்சு பரிமாறிட்டு இருக்காங்க. நல்லா தூங்கினியாம்மான்னு மனைவி கேட்கிறாங்க. நல்ல தூக்கம், தங்க வச்சு உணவும் தந்ததுக்கு ரொம்ப நன்றி...மேல இருக்கிற ஒரு அறைக்கு ஏன் சிவப்பு நிறம் பூசி இருக்கிங்கன்னு இந்த பொண்ணு கேட்டிச்சாம். இல்லையே எங்க வீட்டில எல்லா சுவருக்கும் வெள்ளை நிறம் தானே அடிச்சிருக்கோம். சிவப்பு நிறம்னால எங்களுக்கு எங்க பொண்ணு நினைவு தான் வரும். ஆண்டவன் எங்க பொண்ணை சின்ன வயசிலயே பறிச்சுகிட்டான்மா. ஹிம்ம் சொல்ல மறந்திட்டமே எங்க பொண்ணோட ஒரு கண்ணு சிவப்பா இருக்கும்மா........

sms ஜோக்ஸ்

1)அப்பா:ஏண்டா டெஸ்ட்டுல சீரோ மார்க் வாங்கியிருக்க?பையன்:அது சீரோ இல்லப்பா, நா நல்லா படிக்கிறேன்னு டீச்சர் ஓ போட்டுருக்காங்க...

2)லைஃப் போர் அடிக்குதா?Type: 'I love' your lover nameand send it to all your relativesமுயற்சி பண்ணிப் பாரு,அப்புறம் போர் அடிக்காது,ஊரே அடிக்கும்.

3)ஒரு அரக்கன் ஒரு அரக்கியோட கோவிலுக்குப் போனான்.ஆனா, கோவில் கதவ ஓபன் பண்ண முடியல,ஏன்?ஏன்னா, அவன் அரை+கீ யோடதான போனான், முழு கீயோட போகல.

4)ஒரு பொண்ணு வண்டி ஓட்டுறத எப்படி டெக்னிக்கலா சொல்லுவாங்க?.....’பெண் ட்ரைவ்’னு சொல்லுவாங்க.

5)கசப்பான அனுபவங்கள் இல்லையென்றால்,இனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது......அதனால,உடனே 2 பாவைக்காய் வாங்கி சாப்பிடுங்க.

6)அந்த மூன்று வார்த்தை,அம்மா சொன்ன வார்த்தையை விடப் பெரியது,காதலி சொன்ன வார்த்தையை விடப் பெரியது......நண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை,’மச்சி நானும் பெயில்’.

7)எறும்புக்கும், கொசுவுக்கும் கல்யாணம்.முதலிரவு அன்னைக்கி, கொசு வெளிய உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருக்கு.அப்போ, கொசுவோட நண்பன் கேக்குது, ‘என்னடா மாப்ள, முதலிரவும் அதுவுமா வெளிய உக்காந்து என்னடா பண்ற?’அதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம்,‘சிரிக்கி மவ, உள்ள குட்நைட் போட்டு தூங்குறாடா மச்சான்.’

8)இதப் படிக்கிறவங்க முட்டாள்,படிக்காதவங்க லூசு,சேவ் பண்ணி வச்சா கிறுக்கு,டெலிட் பண்ணா கொரங்கு,சிரிச்சா மெண்டல்,கோவப்பட்டா நாயி,எனக்கு திரும்ப அனுப்புனா எருமமாடு,எனக்கு கால் பண்ண நெனச்சா கழுதை,எதுவுமே பண்ணலன்னா தண்டம்,இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ?

9)கணவன்:எனக்கு ஆபரேசன்ல ஏதாவது ஆயிட்டா, நீ டாக்டர கல்யாணம் பண்ணிக்கோ.மனைவி:ஏன் இப்படி சொல்றீங்க?கணவன்:எனக்கு அவர பழிவாங்க வேற வழி தெரியல...

10)நீதிபதி:எதுக்குப்பா அவன் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிட்ட?நம்மாளு:அவந்தான் சார் சொன்னான், என் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிடா 10 பைசான்னு.

Friday, August 21, 2009

கந்தசாமி திரை விமர்சனம்


விக்ரம் .... இதுல விட்டத அடுத்த படத்துல சரிபன்னிர்லாம்

ஷ்ரேயா .... நிறைய வாய்ப்பு வரும்

இயக்குனர் ...... தயாரிப்பாலர்லாம் பயப்புடுவாங்க

தயாரிப்பாளர் ..... ????????????????????

கதை ..............

பண முதலைகளிடம் கருப்பு பணத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுப்பது (உடனே சிவாஜி ரேஞ்சுக்கு கற்ப்பனை பண்ணப்படாது அதுவே கொஞ்சம் மொக்கை தான் )

விக்ரமை சூப்பர் ஹீரோ நு விளம்பரம் பண்ணிட்டு அந்த இமேஜை முதல் படத்திலேயே காளிபன்னிட்டாங்க cbi ஆபிசர் கந்தசாமி (விக்ரம்) ரைடு பண்ணும் கருப்பு பணத்தில் கொஞ்சம் அமுக்கி கந்தசாமிஇன் பெயரால் (சாட்சாத் முருகன் தான் ) ஏழைகளுக்கு கொடுக்கிறார் , ஒரு வித்யாசமான கெடப் சூப்பர்மேன் , ச்பய்டர்மேன் க்கு அடுத்து காக் மென் (சேவல் வேஷம் போட்டா அப்படித்தானே கூப்படனும் ).

லொள்ளு சபா விற்கு வேலை வைக்கவில்லை இவுங்க சூப்பர் மென் இமேஜை இவுங்களே கலாய்ச்சிட்டாங்க (வடிவேல் , சார்லி ).ரொம்ப நாளைக்கப்புறம் மன்சூர் அலிகான் .. முதல் சீனில் வில்லன் அப்புறம் காமெடி தாங்கமுடியல...

அடுத்து பிரபு .. கொஞ்ச நாள் இவரு நடித்த படமெல்லாம் நல்லா போச்சு இது ?(இந்த செண்டிமெண்டும் உத்திகிச்சே ).

தயாரிப்பாளர் செலவில் மேக்சிகொலாம் போயிட்டு வந்திருக்காவ அத பத்தி எழுதனும்னா ........................ சீ நான் விமர்சனம்தான் எழுதுறேன் நாவல் இல்ல .

ஒளிபபதிவு.......... வித்தியாசமா lighting வைக்கிரோம்டு overexposing

ஒலிப்பதிவு..... சண்டை காட்சியில் ஹை frequencyகாது வலிக்குது , பாடல் காட்சியில் லோ frequencyநெஞ்சு அடிக்குது . நான் பாத்த தேட்டர் சரிஇல்லேனு நெனைக்கிறேன் (எல்லாத்தையும் நானே நல்லாலனுட்டா எப்புடி )

இருந்தாலும் படம் பாக்க மூணு காரணம் இருக்கு .......

1 ........... ஸ்ரேயா cock man னுக்கு எத்த செம வெடக்கோழி அதிலும் பாத டாப் பிலிருந்து வரும்போது நம்மையும் எட்டி பாக்க வைக்கிறார் (ஒன்னும் தெர்லே)

2............. ஒரு நல்லா தயாரிப்பாளரை தமிழ் சினிமா இழக்க வேண்டாம் .

3.......... ஏன் நல்லாலனு நீங்களே போய் பாருங்க.

Thursday, August 20, 2009

Beauty of Mathematics !!!!!!!

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 111
2 x 9 + 3 = 1111
23 x 9 + 4 = 11111
234 x 9 + 5 = 111111
2345 x 9 + 6 = 1111111
23456 x 9 + 7 = 11111111
234567 x 9 + 8 = 111111111
2345678 x 9 + 9 = 1111111111
23456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321
எதாவது சொல்லிட்டு போங்க

Wednesday, August 19, 2009

கடவுள் நம்பிக்கை

ஒரு அமாவாசை இரவு , ஒருத்தன் மலை உச்சியில் இருக்கும் கடவுளை பார்க்க சென்றான் . அப்பொழுது அவன் நண்பன் கேட்டான் "ஏன் பகலிலே போகக்கூடாதா?"

அதர்க்கு அவன் கடவுள் எனக்கு வழி காட்டுவார் என்றான்

ஒருவழியாக அவன் உச்சியை அடைந்துவிட்டான் அப்போது ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தான் . அது ஒரு பெரிய பள்ளம் , ஒவ்வொரு மரத்தின் மீதும் மோதி மோதி கீழே விலும்போது கடவுளே என்னை கப்பத்து என்று கத்தினான் ,

அப்பொழுது ஒரு மறக்கிலையை பிடித்து தொங்கிக்கொண்டே கடவுளை திட்டினான் . அப்போது கடவுள் அவனிடம் கிளையை விட்டுவிடு நான் கப்பத்துறேன் என்றார் . சுத்தி சுத்தி பத்தான் , ஒரே இருட்டு .

அவன் கடவுளை நம்ப தயாரா இல்லை . கிளையை விடாமல் விடிய விடிய தொங்கிக்கொண்டே இருந்தான் .

ஒருவழியா விடிந்தது , கீழே பார்த்தவனுக்கு பயங்கர அதிர்ச்சி ,

அவன் காலுக்கும் கீழ அரையடி துரத்தில் தரை இருந்துச்சாம் .

என்ன கொடும சார் இது

ஒரு பெரிய குடும்பம் . ரொம்பநாளா அந்த குடும்பத்துல பெண் வாரிசே இல்ல (அஞ்சாறு தளமுரையன்னு வச்சுக்குங்களே) . ஒரு நாள் அவங்க வீட்ல ஒரு பெண் குழந்தை பிறந்தது . எல்லோரும் போயி குழந்தைய பார்த்தாங்க .

அப்பிடி பார்த்துட்டு வந்த ஒருத்தர்ட்ட ஒரு அம்மா கேட்டுச்சு "குழந்தை யார் ஜாடையா இருக்கு"

அப்ப வந்தவரு சொன்னாரு அத யாரு பார்த்ததுனு

என்ன கொடும சார் இது .

Monday, August 17, 2009

கிசுகிசு .......

செட்களில் அருந்ததீயைப் பார்ப்பவர்கள் அரண்டு போய் விடுகின்றனராம். காரணம், கையில் தம்மும், வாயில் புகையுமாகத்தான் காணப்படுகிறாராம்.அடுத்தடுத்து பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறாராம். ஏன் இப்படி என்று கேட்டால், உடம்பைக் குறைக்கத்தான் என்கிறாராம்.இது உடம்பை உருக்குமே என்று குழப்பமாகி நின்றால், புகை பிடித்துக் கொண்டே இருந்தால் வயிறு மப்பாகி தொம் என்று இருக்கும். பசிக்காது. பசித்தால்தானே நாம் நிறைய சாப்பிட்டு உடம்பு பெறுக்கிறது. அதைத் தவிர்க்கத்தான் இப்படி ஒரு டிரிக் என்கிறாராம் வாயிலிருந்து சுருள் விட்டபடி..என்னா மாதிரியான சயின்டிபிக் திங்கிங்..!

===================================================================

ரம்லத்தை நேரில் சந்தித்த நயன்தாரா தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், விவாகரத்து போன்ற முடிவுக்கு அவசியமின்றி இருவரும் இணைந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.வேறு வழியின்றி இந்த முடிவை அமைதியுடன் கேட்டுக் கொண்டாராம் ரம்லத். இந்த மவுனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட பிறகே பிரபுதேவாவை தன் துபாயிலிருக்கும் தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்தினாராம் நயன்.சமீபத்தில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இதை ஒப்புக் கொண்டுள்ள நயன்தாரா, திருமணம் எப்போது அல்லது ஏற்கெனவே முடிந்துவிட்டதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார். ஆனால் நிச்சயம் அனைவரையும் அழைத்து வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் நயன்.ஆக... செட்டில்மெண்ட் ஆகிடுச்சின்னு சொல்லுங்க!

==============================================================

Wednesday, August 05, 2009

ஒரு கன்னத்தில் ..............

" பரம்பொருளின் புதல்வர்களே!
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்!
அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்!

Friday, May 08, 2009

அப்பாலே போ சாத்தானே

அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.
இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.

“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.

நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.
“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.

“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.

சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.

அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….

அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….

உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….
உளறிக்கொண்டே போனது அது……

அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.

“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..

உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.

 

 

 


Thursday, April 02, 2009

அம்மா


இந்த போட்டோஷாப் கத்துகிட்டு இவனுங்க பண்ற லொள்ளு தாங்கல... சாமீ..
அ.இ.அ.தி.மு.கழகத்தினரும், அம்மாவும் என்னை மன்னிக்கட்டும்.

continue


"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா
துவண்டு போய் உக்காராதீங்க....
தெய்வத்தை மாத்திட்டு
காதலைக் CONTINUE
பண்ணுங்கப்பூ.... " 

Thursday, March 12, 2009

இனியவளே!


இனியவளே!
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட
தோழியே!
என் மீது காதல்
உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை
சுமந்த படி
துடிக்கும் இதயத்திற்கு
நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில்
என்னை
மனிதனாகவும், பைத்தியமாகவும்
மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே....!

எனக்குள் நானே


நீ
புன்னகைக்கும் போதெல்லாம்–என்னுள்
புதுரத்தம் பாய்கிறது 
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?


தினமும் எழுந்து
சிந்திக்கிறேன் பெண்ணே –உன்
சிரிப்புக்குவமைகளை
கடைசியில் என்னையே நான்
நிந்தித்துக்கொள்கிறேன்
வராத வார்த்தைகளுக்காய்!

நிட்சயமாய்ச் சொல்வேன்
நீதானெனக்குச்
சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என்
வாழ்வின் மனஇறுக்கங்களால்
தோன்றிய வேதனைகளுக்கு நீ
மரண தேவதை!

அதுவோர் காலங் கண்ணே
எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான் மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை

நினைத்துப் பார்க்கிறேன்-நாம்
பேசிக்கொண்டதைவிட
பிரியமாகச் சிரித்துக்கொண்ட
பொழுதுகள் ஏராளம்-ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்!

விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில் என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே சிரித்துக் கொள்வதற்காய்!

நிலவு


அவளுக்காக அர்ச்சனை செய்ய 
கோவிலுக்கு சென்றேன்.
அங்கு குருக்கள் கேட்கிறார் 
என்ன நட்சத்திரம் என்று 
பாவம் அவருக்கு தெரியுமா...?
அவள் "நிலவு" என்று...!

காதல்


பனி பட்ட இடமெல்லாம் 
குளிர்ச்சி 
உளி பட்ட இடமெல்லாம் 
சிற்பம் 
உன் விழிபட்ட 
என் நெஞ்சமெல்லாம் 
காதல்

ஆணாக மாறிவிடு,

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

உன் நினைவுகள்


நினைவோடு தான் பேச முடியவில்லை...
கனவோடு பேசலாம் என்றால்,
உன் நினைவுகள் என்னை
தூங்க விடுவதில்லை....

புவி ஈர்ப்பு விசை


ஆப்பிள் கீழே விழுந்தவுடன் 
நியூட்டன் 
கண்டுபிடித்தார் 
புவி ஈர்ப்பு விசையை 
நான் உன்னில் விழுந்த 
பிறகு தான் கண்டறிந்தேன் 
உன் விழி ஈர்ப்பு விசையை 
ஆப்பிள் எழவுமில்லை 
நான் மீளவுமில்லை 

சுவாசிக்காமல்..........


காதலை நேசிப்போம் 
கல்யாணத்தை யோசிப்போம் 
நட்பை சுவாசிப்போம் 
நேசிக்காமலும் யோசிக்காமலும் 
இருக்கலாம் ஆனால் 
சுவாசிக்காமல்............

பேசி விடுகிறேன்


எப்போது வாய்க்கும்
உனக்கும் எனக்குமான
அந்த இனிய பொழுதுகள்.......!
நான் பேச எத்தனிக்கும்
எல்லா நேரங்களிலும்
நீ யாரிடமோ பேசியபடி.......!
உன்னோடான என் பேச்சு
எப்போது துவங்கும் என்றே தெரியாத போது
"அப்புறம்"
என்றபடி நீ பேச்சை நிறுத்துவாய்......!
ஆரம்பப் புள்ளியையே
நான் தேடிக்கொண்டிருக்க
நீ அதையே முற்றுப்புள்ளியாய்
முடிக்கப் பார்க்கிறாய்.......
பேசுகிறேனே கொஞ்சம்.......
வினாடி நேரமாவது
என்னை விழிகள் விரிய பாரேன்...!
பேசி விடுகிறேன்
என் கண்களால் மட்டுமாவது..........

எனக்குள் தேம்புகிறது


சொல்ல நினைக்கும்
மனதும்
வெளிவர மறுக்கும்
வார்த்தைகளும்
போரிடும் போதெல்லாம்
மௌனமாய்
எனக்குள் தேம்புகிறது
என் காதல் .......

கடந்தகால நினைவு




ஸ்நேகிதியே
எங்கோ ஓர்
பௌர்ணமி நாளில்
தூங்காத இரவுகளில்
நீங்காத நினைவுகளாய்
என்னுடன் உறவாடும்
நம் ஸ்நேகம்

முதலில் பார்த்தும்
மலராய் சிரித்ததும்
அப்போது
இன்பச்சாரலை
அள்ளி வீசினாலும்....

பின்னாளில் வரும்
இடிமழையாய்
நம் பிரிவை
அந்நாளில் நாம்
உணரவே இல்லை

பிரிவெனும் பேரிடி
தாக்கிடும் என்று
தெரிந்திருந்தும்
மலை எதிர்க்கும்
மலர்களாய் நாம்
மனங்கிறங்கி லயித்திருந்தோம்

பாட வேளையில்
பகிர்ந்து கொண்ட
பசுமை நினைவுகள்
இன்னும் என்னுள்
இறந்து விடாமல் ... என்னை
உறங்கவும் விடாமல்

விளையாட்டு பேச்சும்
விஷமக் குறும்பும்
இன்றும் எதிரொலியாய்
இங்கும் ஒலிக்குதடி

கொத்திப் பசியாற்றும்
மரங்கொத்திப் பறவையாய்
என் மனங்கொத்தித் தின்னும்
சிநேகப் பறவையடி நீ...!

எங்கோ ஓர்
இருண்ட இருளில் இரையும்
சுவர்க்கோழி போல்
இம்சிக்கிறது ...நம்
கடந்தகால நினைவு

நீயுதிர்த்த வார்த்தைத் துளியில்
நிறைவுபெற்ற
நீர்நிலையாய் நம் நட்பு
அதில் நீந்திக் களிக்கிறது
என் நினைவு

மறவாதே என்றாயே
என் மனம
உன் நினைவுப் பச்சைகளை
அல்லவா
சுமந்து கொண்டிருக்கிறது ..

என் தேவதை!!!!!


தொலை தூரத்தில்
வானமாம்....
நம்ப முடியவில்லை
பக்கத்தில் இருக்கிறாள்
என் தேவதை!!!!!!

“என்னவள்”


கோவிலில் அழகு சிலைகள்
அனைத்தும் அசையாதிருக்க!
ஒரு சிலை மட்டும் நகரக்கண்டேன்
“என்னவள்” கோவிலை சுற்றி வரும் பொழுது.

கண்சிமிட்டலும்


மௌனத்தை
மொழியாக்கி
அவள் விழிகளை
உரையாற்றச் சொல்லுங்கள்
கண்சிமிட்டலும்
கவிதையாகக் கூடும்....

நான் பிறந்ததே


நீண்ட தயக்கத்திருக்கு
பிறகு
உன்னை விரும்புகிறேன்
என்றேன்
மெலிதாய் புன்னகை செய்தாய்
ஏன் என்றேன்
அட போட
நான் பிறந்ததே உன்னை
காதலிப்பதற்கு மட்டும் தான்
என்றாய் !!!

விழி பேசும் மொழி


காதலுக்கு மொழி தேவையில்லை 
என்பது உண்மை தான் 
அவள் வாய் திறந்து பேசும் மொழியை விட 
அவள் விழி பேசும் மொழி அழகு

விளை நிலம்


உன்னிடம் பலமுறை வந்து எதுவும்
என்ன பேசுவது என்று தெரியாமல்
திரும்பி விடுகிறேன் ?
எத்தனை முறை உழுதாலும்
என்ன விதைக்க போகிறார்கள்
என்று தெரியாமல் கிடக்கும்
விளை நிலம் போல ??

அவள் உருவத்தை


உருவத்தை பார்த்த அவள்
என் உள்ளத்தை பார்க்க
மறந்து விட்டாள்
அவள் உள்ளத்தை பார்த்த
என்னால் அவள் உருவத்தை
மறக்க முடியவில்லை..... 


எனதருமை காதலியே


கள்ளி மலர் இதழுக்குள்
தேன் துளியை உறிஞ்சத் துடிக்கும்
வண்டாய்
தூண்டில் இரையை
தின்னத் துடிக்கும்
மீனாய்
பல்லக்காய் நினைத்து
இந்த பாடைக்குள்
தஞ்சம் புகுந்தேன்

நான் புதையுண்ட இடத்தில்
பூத்துக் குலுங்கும்
மலரில் ஒன்று
உன் தலை பாகத்தை
அலங்கரிகக் கடவாய்
எனதருமை காதலியே !!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, February 23, 2009

நீ என் இதயத்தில்





எதற்க்காக உன் விலாசத்தை மறைகின்றாய்,
எங்கே நான் வந்து விடுவேனோ என்ற அச்சம் தானே?
பேதையே,
நீ என் இதயத்தில் வசிக்கும் போது,
நான் ஏன் உன் வீடு தேடி வர போகிறேன் ....

ஈரிதழ் ரோஜா

மெய் எழுத்துகள் எல்லாம்
உயிர் பெற்று விடுகின்றதுஈரிதழ் ரோஜா நீ
உச்சரித்திட.....

விழிகுளம்



வெகு நாட்களுக்கு
பிறகு சந்தித்துக்கொண்ட
" வீணையும் விரலும் " நாம் ?
அருகில் வந்தேன்
இதென்ன
இவள் விழிகுளம்
" மீனையும் காட்டுகிறது ------
தூண்டிலையும் நீட்டுகிறது " !

சுகமான சுமை

என் உயிரே
நீ எங்கிருந்தாலும்
என் மனதில்
நித்தம் நித்தம்உன்னை பற்றிய கனவுகள்தான்
சுகமான சுமையாக

கனவாக அல்ல

பிரிந்து போன உன்
நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்கு வந்து
கொண்டுதான் இருக்கின்றன
கனவாக அல்ல
கண்ணீராக.......

உன் மௌனங்கள்



உன் மௌனங்கள் தான் ,
என்னை பேச்சாளனாக்கியது.!
என்ன பயன்.?
உன் அருகில் வருகையில்,
ஊமையாகி விடுகிறேனே....!!

கண்ணீராக நான்



கண்களாக நீ
கண்ணீராக நான்
தெரியாமல் கூட
அழுது விடாதே
நான் உன்னை விட்டு
பிரிந்து விடுவேன்

விண்மீன்கள்



என்னவளின் முகத்துக்கும்
நிலவுக்கும்
வித்தியாசம் தெரியலையாம்
குழப்பத்தில்
சிதறிகிடக்கின்றன
விண்மீன்கள்
வானத்தில்!!

தவம்



உன் நெற்றிக்குகாக
ஆயிரம் நட்சத்திரங்கள்
தவம் கிடக்கின்றன
வானத்தில்
உன் நெற்றி பொட்டாக
வருவேன் என்று.................

எமனுக்கு



எமனுக்கு தான்
என் உயிரை
எடுக்கும் உரிமை
என்று நான்
நினைத்து இருந்தேன்
உன் கண்களை
பார்க்கும் முன்பு வரை!!

மழை



நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி
கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை
தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை
ஒன்றாக்கி கவிதை
தந்தாயே......

காதணிகள்



உன் காதுகளும்
கதை சொல்லுமோ?
காதணிகள்
தலையசைக்கின்றனவே!

சுமங்கலி



சூடியவர்களை எல்லாம்
சுமங்கலி ஆக்கிவிட்டு
தான் மட்டும் எப்போதும்
விதவை கோலத்தில்....

நட்ப்பு



காதலும் நட்பும் சந்தித்து கொண்ட போது
காதல் கேட்டது
நான் வந்து விட்ட பின் நீ எதற்கு?
நட்பு சொன்னது
நீ விட்டு செல்லும் கண்ணீரை துடைக்க என்று...

இதயம்



உன்னை பார்க்கும் தருணங்களில்
என் இதழ்கள் மூடிகொள்கின்றன
இதயமோ ஒலியினை அதிகரித்தது
உள்ளிருந்து சத்தமிடுகிறது

நாள் கட்டி



தினமும் கிழிக்கும்
காலண்டர் சீட்டுகளை
பத்திரப்படுத்தி வைத்துளேன்
அவை அன்றன்று
உன்னுடன் நிகழ்ந்த
உரையாடல்களை
சுமந்திருந்தன என்பதற்காக

மொழி



உன் பெயரை தவிர
மொழியின் மற்ற எழுத்துகள்
என் பேனாவால் பெரும்பாலும்
தவறாகவே எழுதப்படுகின்றன

தனிமை



மாற்றங்கள் யாவும் காலத்தின்
கட்டாயமாம் - ஏன் தோழி
பருவங்கள் பல கடந்தும்
பசுமை மாறா உன்
நினைவுகளுடன் - நான் மட்டும்?

வலி



பெண்ணே,
இடது பக்கம்
சிந்தித்துப்பார் ஆண்களின்
வலி புரியும்.....

Sunday, February 22, 2009

நவநீ


யத்தனே நாய் ஓடினாலும் நான் யானை