Wednesday, October 13, 2010

சிந்து

நமக்குத்தான் தமிழ்நாட்டை தாண்டுனா மனுசங்க லாங்குவேஜே புரிய மாட்டீங்குது. இதுலே மெஷின் லாங்குவேஜ் வேற ! ரொம்ப அலுத்துகிட்டே லேப்புக்கு போனோம். அவுட்புட்டை காட்டுனாத்தான் ஆச்சுன்னு அங்க இருக்குற லெக்சரர் பண்ற அழிச்சாட்டியம் இருக்குதே?? ஏதாச்சும் இன்புட் இருந்தாதானே ? தெரிஞ்சா காட்டமாட்டமா? என்ன .பண்றது ‘லேப்’ குள்ள போனா ஒரு இன்பியலான காட்சி !! சிந்து அங்கே லேப்பில் !! அதுவும் எங்க லெக்சரர் கூட ஏதோ பேசிகிட்டு இருந்தா ! பாவம் அவளுக்கும் அவுட்புட் வரலையோ என்னவோ !“பாய்ஸ் ! இவங்க பேர் சிந்து . இவங்கதான் உங்க ‘லேப் இன்ஸ்ரக்ட்டர்’ ஏதாசும் ப்ரோக்ராம் சம்பந்தமா சந்தேகம் இருந்தா கேட்டுக்கலாம்! “ ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் இன்பமும் !! என்னடா இது ஸ்டூடண்டுன்னு நெனச்சமே !! நமக்கு ஒண்ணும் தெரியாதுன்ன மதிக்க மாட்டாளே ! வேற வழியே இல்லை சிந்துவுக்கு முன்னாடி நம்ம மானம் போய்டகூடாது. முடிவெடுத்தேன்.
சிந்துவுக்கு ரொம்ப தங்கமான மனசு ( நெசமாத்தான் ) எந்த சந்தேகம்னாலும் உண்டனே க்ளீயர் செஞ்சா.நமக்குத்தான் டவுட்டே வராதே. ஏதாச்சும் தெரிஞ்சாதானே ! எல்லாரும் Flow Chart வச்சுகிட்டு அல்லாடிகிட்டு இருந்தா நான் சிந்துவொட Flow லேப்பில் எங்க இருக்குன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். இப்படியே விட்டா சரிப்படாது. ஏதாச்சும் ‘டவுட்டு’ ன்னாதானே சிந்து கிட்டே பேசமுடியும். கஷ்டப்பட்டு ஒருவாரம் ப்ரோக்ராம் கத்துகிட்டு சிந்து கிட்டே கேட்கறதுக்காக வண்டி வண்டியா டவுடோடே போனேன்.நான் கேட்ட வரலாற்று சிறப்பு மிக்க டவுட்டுகளைக் கேட்ட சிந்து இரண்டே வரிகளில் பதில் சொல்லித் தீர்த்துவிட்டு போனாள். ‘ ச்சே! என்ன இது ஒரு வாரம் ப்ரிபேர் பண்ணுனது வேஸ்ட் ஆகிபோச்சே! எப்போடா கம்ப்யூட்டர் லேப் வரும்ன்னு பசங்க எல்லாரும் தவம் இருக்க ஆரம்பிச்சிட்டோம். கம்ப்யூட்ட்ர் லேப்புன்னாலே காத தூரம் ஓடுர பசங்க கூட லேப் 2 மணிக்கின்னா 1 மணிக்கே போய் உட்கார ஆரம்பிச்சிட்டாணுங்க!“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “ என் நலம் விரும்பி தோழன் துரைசிங்கம் சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு சந்தேகத்தை தேடி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையில் இதுவரை எட்டிப்பார்த்திராத கல்லூரி லைப்ரரி வரை ஓடினேன்.
ஒருவழியாக சிலபல டவுட்டுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்தேன்.ஒகே அடுத்தது action தான் ! மத்தியானம் பசங்க எல்லாம் லேப்புக்கு போக ஆரம்பிச்சானுங்க. ‘டேய் துரை அப்படியே போய்கிட்டு இரு நான் பாத்ரூம் போய்ட்டு வாரேன் என்ன ? ‘ ‘சீக்கிரம் வாடான்னு’ சொல்லிட்டு ஓடினான். எல்லாரோடையும் போனா பத்தோடு பதினொன்னு! கொஞ்சம் லேட்டா போனாத்தான் நநன் லேட்டஸ்டா தெரிவேன். என் ஐடியாவை நினைத்து நானே என்னை பாராட்டித் தள்ளினேன்.எல்லாரும் போய்ட்டானுங்க போல ! ஒரு பயலையும் வழியிலே காணோம்.இதோ லேப் தெரிகிறது. லேப்டாப் போல சிக்கென்று என் சிந்து. என்னை கவனித்துவிட்டாள் !! என்னப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. “ கமான் பாண்டி ஒர்க் அவுட் ஆகிடும் போல இருக்கே !! “ நேரா அவள் டேபிளுக்கே போய் டவுட் கேட்டுற வேண்டியதுதான். பசங்க எல்லாம் ஏதோ பில்கேட்ஸுக்கே கோடிங் கத்துத்ர்ற ரேஞ்சுல எதையோ தட்டிகிட்டு இருந்தானுக.என்னையவே பார்த்துகிட்டு இருக்காளே !! எங்கோ மனம் பறந்தது. அருகில் சென்றவுடன் சிந்துவின் பார்வையில் ஒரு தவிப்பு. நான் என் சந்தேகங்களை எடுத்து விட ஆரம்பித்தேன். சிந்து ஏதோ என்னிடம் சொல்ல வந்த மாதிரி தெரிந்தது. விடலையே ! இப்போதே முழுசையும் கேட்டுடணும் இல்லேண்ணா எனக்கு மறந்து போச்சின்னா?? ஒருவழியாக கேட்டு முடித்துவிட்டு சிந்துவைப் பார்த்தேன்.யெஸ் அவள் முகத்தில் குழப்பம். இதைத்தான் எதிர் பார்த்தேன். தெரியலைன்னு சொல்லப் போறா இல்லை ரெபர் பண்ணிட்டு சொல்றென்னு சொல்லப் போறா !! எம் முகத்தில் பெருமிதம் ததும்பி வழிந்தது. “நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?” “ நோ நோ மேம்! “ நீங்க உங்க பேண்ட் ஸிப்பை போடலைன்னு நெனைக்கிறேன் ! “ ஆயிரம் போக்ராண் குண்டு என் மனதில் . என் கண்முன்னே என் மானம் ஸிப் வழியாக போய்டுச்சே!! டேய் என் முகம் கண்டிப்பா அவளுக்கு நெனப்புல வரும் ஆனா அது நான் கேட்ட கேள்வியினால இல்லே !!! யாராச்சும் ஒரு நாலு முழக் கயிரு கொடுங்கப்பூ அப்படியே தொங்கலாம் போல இருக்கே !!! இதப்போயி எப்படி மறந்தேன் ! இப்போ நெனச்சாலும் காலெல்லாம் நடுங்குது !

Tuesday, October 12, 2010

‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க


நம்ம பசங்களும் சரி பொண்ணுங்களும் வாழ்க்கையிலே பல சுவாரசியமான விஷயங்களை miss பண்ணிடறாங்க. வாழக்கைய சுவாரசியமா மாத்திக்கறது நம்ம கையிலே இல்லீங்க!!! ஆனா நம்ம கண்ணுலதான் இருக்குன்னு நான் சொன்னா நம்புவீயளா ??

அட ஆமாங்க. அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. ரோட்டோரமா ஒரு அழகான பூச்செடியப் பார்க்கறீங்க. ஆஹா இந்த பூ அழகா இருக்கேன்னு பார்த்து ஒரு குட்டி சந்தோஷத்தோட அப்படியே கடந்து போறீங்க இல்லியா? இதே மாதிரி தாங்க ‘சைட்’ டும். நீங்க அப்படியேக்கா நடந்து போய்கிட்டு இருக்கீங்க. எதிர்ல ஒரு அழகான பொண்ணு ஒண்ணு உங்களுக்கு புடிச்ச மாதிரி மினி ஸ்கர்ட் போட்ட நமீதா மாதிரி உங்க கண்ணை கன்னாபின்னானு கவர்ந்துகிட்டு வருதுன்னு வைங்க உடனே உங்க மண்டைகுள்ள ஒரு 100 வாட்ஸ் பல்பு ‘குய்யோ’ னு எரியும் பாருங்க அதுதான். அப்படியேக்கா வெளிய வரத்துடிக்கிற உங்க நாக்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு வாய்குள்ளாரவே நாலா மடக்கி வச்சுகிட்டு அந்த பொண்ணொட அழகை மட்டும் போறபோக்கிலே ஒரு 10 செகண்ட் ரசிச்சீங்கன்னா மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக சந்தோசம் வந்து சேர் போட்டு குந்திக்குமே அதை அனுபவச்சிருக்கீயளா ? ( இதே நீங்க பொண்ணுன்னா ஸ்மார்டான பையன்னு மாத்திகுங்க அம்மணீஸ் ஓகேவா ? )

நெறைய பேரு ‘ சைட்’ அடிக்கிறதுன்னா ரொம்ப தப்பா நெனசுக்கறாங்க. அதெல்லாம் ‘சைட் சைக்காலஜி ‘ பத்தி தெரியாதவங்க சொல்லுற அல்பதனமான argument. சைட் அடிக்கறதுங்கரது ஒரு கலை தெரியுங்களா? என்னடா இது கேவலம் சைட் எப்படி கலையாகும்னு நீங்க எல்லாம் வாயப்பொளக்கறது எனக்குத்தெரியுது !! door close plz. ஏன்னா இந்த கலையையும் கத்துக்கனும். ‘ சைட் டெக்னாலஜி' பத்தி சொல்லத்தானே நான் இருக்கேன் !!!

முதல்ல சைட் அடிக்கிறது ஒன்வே ட்ராபிக் மாதிரி இருக்கனும் எதிராளிக்கு கூடுமானவரை தெரியக்கூடாது. ( தெரிஞ்சா ஒண்ணும் இல்லீங்க அப்புறம் அந்த பொண்ணோ/ பையனோ பண்ணுர அழிச்சாட்டியம் தாங்காது அதான் ! ) சைட் அடிகிறப்போ அப்படியே பிச்சக்காரன் பிச்சகோழி வறுவலை பார்க்கர மாதிரி ஆன்னு பார்க்க கூடாது. அப்படியே ஏதோ நீங்க வயிறு முட்ட சாப்டுட்டு அப்பாலைக்கா வர்ற ‘டெஸர்ட்’ டை பார்க்கிற மாதிரி வெறுப்பாவும் இல்லாம ஆய் ஆய்னும் இல்லாம ஒரு குத்தாம்போக்கிலே ஜெண்டிலா பார்க்கணும் . ‘சைட்’ அடிக்கறதோட நேரத்தை பொறுத்து அது ஜொள்ளுன்னு பெயர் மாற்றம் அடையக்கூடிய அபாயம் இருக்குங்கரதையும் நீங்க மறந்துடக்கூடாதுங்கண்ணா. எப்போலாம் சைட் அடிக்கலாம்னு இப்போ பார்க்கலாமா?

இந்த சைட் அடிக்கறதோட ‘ப்யூட்டி’ யே இதுக்கு நேரம் காலம் இடம் பொருள் ஏவல் ஒவல் இப்படி எந்த கருமாந்தரமும் இல்லாததுதான் . நீங்க நடக்கறப்போ, ஓடுறப்போ, ( நாய் தொரத்தரப்போ வேணாம் ப்ளீஸ் ! ) ஆபிஸிலே உட்கார்ந்துகிட்டு இருக்குரப்போ, ஷாப்பிங் போறப்போ, வண்டியிலே போறப்போ ( ஓரமா மெதுவா போறப்போ மட்டும் ) இப்படி எப்போவேணாலும் எங்கயும் . ஆனா இதெல்லாம் beginners in ‘சைட்’ டிங்குகளுக்குத்தான். கொஞ்சம் நம்மள மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் gain பண்ணிட்டீங்கன்னா எவ்ளோ வேகமா வண்டியிலே போனாலும் எவ்ளோ அவசரமா flight/ train ஐ பிடிக்க தலைதெரிக்க ஓடிகிட்டு இருந்தாலும் கெடைக்கிர ஒரு செகண்ட் gap பைகூட வீணாக்காம சைட் அடிக்க சான்ஸ் கெடைச்சா ச்சும்மா கண்ணாலயே ரவுண்டு கட்டி மனசுக்கு charge ஏத்திகிட்டு பட்டையக் கெளப்பலாங்கோ !!

சரி இனி சைட் அடிக்கறதோட நன்மைகள் என்னென்னானு பார்க்கலாமா? 'சைட்' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க. (சில லோக்கல் நமீதாக்களைப் பார்க்கறப்போ மட்டும் கொஞ்சம் ரிவஸ் ப்ராஸஸ் ஆய்டும் ஓகே? ) மனசுக்குள்ள அப்படியே ஒரு தெய்வீக அமைதி உண்டாவதை உணருவீங்க ( அடுத்த தெய்வீக அமைதி எங்கே கிடைக்கும்னு ஒரு தேடல் இருந்துகிட்டே இருக்கனும் சரியா ? )

சைட் அடிச்சா நமக்கும் சந்தோசம் நம்மளால சைட் அடிக்கப்படுறவுகளுக்கும் கொள்ளை சந்தோசம். ( அது உங்க மனைவிக்கு/ காதலிக்கு தெரிஞ்சா நீங்க உங்க dentist கிட்டே ஒரு emergency appoinment வாங்கவேண்டி இருந்தாலும் இருக்கலாம்!! ஜாக்கிரதை )

தேவையில்லாம காதல் கத்தரிக்காய்னு சாம்பார் வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் சைட் ல கெடையாதுங்க ( திரும்ப திரும்ப ஒரே ஆளை சைட் அடிக்காத வரைக்கும்தான் இது ஒர்க் அவுட் ஆகும் ஓகே ? )

அழகா இல்லாட்டியும் அவங்க மனசு புண்படக்கூடாதேன்னு நீங்க ஒரு லேசா ஒரு ‘லுக்’ கைபோட்டு சைட் உட்டீங்கண்ணா அவுக மனசு கூட கொஞ்சம் சந்தோசமாகுமில்ல? அடுத்தவுக மனசை சந்தோசப் படுத்தின ஒரு திருப்தியும் கெடைக்கும் உங்களுக்கு ( அப்புறம் அவுக கூடவே ஓடியார ரிஸ்க்கும் இருக்கு இதிலே !! ரிஸ்க் எடுக்கரது நமக்கெல்லாம் ரஸ்க்கு சாப்புடர மாதிரின்னா வேணா ரிஸ்க் எடுங்க!! பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை )

ஓகே கண்ணுகளா அல்லாரும் நான் சொன்ன சொல்லாத டிப்ஸ் சை வச்சு சந்தோஷமா ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க சரியா ? உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்ச டிப்ஸ் இருந்தா அப்படியே பறிமாறிட்டுபோங்கப்பூ சரியா ?

பப்பாயா தாய் சாலேட்

கொஞ்சம் கேப்ஸிகா சாஸை எடுத்துக் கொள்ளுங்கள்….பக்கத்திலேயே ஆலிவ் ஆயிலும் அவசியம்.தேன் இல்லாவிட்டால் சரியாகாது….எப்படியாவது ரோஸ் வாட்டர் அதி முக்கியம்….
இதையெல்லாம் சட்டீல உட்டு நல்லா ஒரு ஆட்டு ஆட்டுங்க.ஒரே நிமிசத்துல ரெடி….நம்ம பப்பாயா தாய் சாலேட்…..
ஹலோ…என்ன சொல்ல சொல்ல சட்டையப் புடிக்கிறீங்க…?என்ன ரேஷன் அரிசிக்கே திண்டாட்டமா?ஊகூம்…இதெல்லாம் ரேஷன்ல போட மாட்டாங்க….என்ன மூடணுமா?
ஐய்யய்யோ இதெல்லாம் நான் சொல்லுலீங்க. நாம எப்படி சோறு சாப்புடறதுன்னு டீ.வீ.ல சொல்லிக் குடுத்தத திருப்பிச் சொன்னேன்… அவ்வளவுதான்….
தாயோ தகப்பனோ ஊட்டுல தறுதலையா இருந்தா, நாமெல்லாம் இப்புடி பப்பாயா தாய் சாலேட்டோ…தகப்பன் சாலேட்டோ சாப்பிட வேண்டீதுதான்.
--------------------------------------------------------------------------------------------------
ஆடத் தெரியாத எவரோ மேடை சரியில்லை….ன்னாராமா. அப்படி இந்த பயாலஜி, சோஷியாலஜி மாதிரி நியூமராலஜி…நேமாலஜி…வந்தாலும் வந்தது…பலருக்குக் கிறுக்கு மண்டைக்கு ஏறிவிட்டது.அடங்கப்பா பேரை மாத்தறேன்….ஸ்பெல்லிங்க மாத்தறேன்னு சொல்லி இன்ஷியல என்னாவது மாத்தீராதீங்கப்பா. குடும்பத்துக்குள்ள கொழப்பம் என்னாவது ஏற்பட்டறப் போகுது.

ஜொள்ளுவுடுறது எப்படி


அட யாருங்க இந்த காலத்திலே ஜொள்ளுவிடாம இருக்கறா..? இதுல பசங்க என்ன பொண்ணுங்க என்ன எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவுகளா என்ன..? No.. Never.. ஆனா பாருங்க ஜொள்ளு வுட்டு நம்ம பசங்கதான் பச்சையா மாட்டிக்கிறாய்ங்க.. பொண்ணுங்க இந்த விசயத்திலே கொஞ்சம் சூட்டிகைதானுங்கோ... அவுக எப்போ எப்படி யாரைப் பார்த்து ஜொள்ளுவுடுராகன்னு அவ்ளோ சீக்கிரம் கண்டே பிடிக்க முடியாதுங்கோ... இப்படி நம்ம ஆண்குலங்கள் பச்சையா ஜொள்ளுவிட்டு அடிக்கடி ஜொள்ளுவாயோட மாட்டிகிறதை பார்க்க பார்க்க மனசு படற வேதனை கொஞ்ச நஞ்சமில்லீங்கோ... பாவம் அறியாத வயசு புரியாத சைஸ்ல நம்ம பசங்க கொஞ்சம் ஊட்டமும் வாட்டமுமா ஆரையாச்சும் பாத்தா கொஞ்சம் slip ஆகி ஆட்டோமேடிக்கா tongue வெளிய தள்ளி கொஞ்சம் கோக்குமாக்கா ஆய்ட்றாங்க...
அட இதெல்லாம் பசங்க வேணும்னேவா பண்ணறாங்க..? அவுகளுக்கு ஆராச்சும் கொஞ்சம் சொல்லித்தந்தா தானே அக்கம் பக்கம் பார்த்து இடம் பொரும் ஏவல் உணர்ந்து சூதானமா ஜொள்ளு விடுவாக.?
ஓகே Lions.. நாக்கு மூக்கா ஸ்டைல்ல அல்லாரும் கவனமா படிச்சு நல்லபடியா மாட்டிக்காம ஜொள்ளுவிட்டு பட்டைய கெளப்புங்கப்பு..
கண்ணுகளா நீங்க மானாவாரியா ஜொள்ளுவுட்டு போறவுக வரவுக அல்லாரும் வழுக்கி வுழுற அளவுக்கு ஜொள்ளணையின் கொள்ளளவு மீறி வழியற இடம் எதுன்னு பார்த்தீகன்னா இந்த ஷாப்பிங்க் மால்ஸ் தான்.. அதுவும் ஒரு சில பர்ஸை பதம் பார்க்கற மால்ஸ்ல வந்து போற அல்ட்றா மார்டன் அம்மணீஸ் பார்த்தீகண்னா ஏதோ FTV ல இருந்து direct ஆ import ஆன மாதிரி ட்ரெஸ் போட்டும் போடாம இப்பவோ அப்பவோ அவுந்துடுமோங்கர ரேஞ்சுல ட்ரெஸ்சை போட்டுகிட்டு ஃபேஷன்ல ஃபரேடு கெளப்பிகிட்டு நம்ம ஆண்குலங்கள் கண்ணை கன்னாபின்னானு கதறடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பாக. இங்கதான் பசங்களா சூதானமா இருக்கணும். இப்படி அமெரிக்கன் corn மாதிரி ஊட்டமா சுத்திகிட்டு இருக்குறவுகளைப் பார்த்தா நாக்கு உங்களை மீறி 'டண்டனக்கா' னு துள்ளும். ஆனா இந்த மாதிரி சமயத்திலே ஆழமா மூச்சை இழுத்து வுடீங்கன்னா உங்க மனசு கொஞ்ச சாந்தம் ஆகும் அப்படியே அந்த அம்மணி போட்டிருக்கற செண்ட் டை மோப்பம் புடிச்ச மாதிரியும் இருக்கும்.. ஹிஹிஹிஹி... எப்படி..???
அடுத்த வகையறா எப்படீன்னா உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக. இவுக கிட்டே பேசறப்போ உங்களை அறியாமலே வாயில இருந்து ஜலம் வழிய ஆரம்பிச்சுடும்.. உங்களால உணரவே முடியாதுங்க.. உங்களுக்கு என்னவோ நீங்க ஸ்டடியா பேசிகிட்டு இருக்கற மாதிரிதான் தெரியும் ஆனா உங்ககூட வேலை செய்யுற சக normal அம்மணீஸ் முகத்தைப் பார்த்தே நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கற climatic conditions ஐ மோப்பம் பிடிக்கலாம்.. இந்த வகை ஆளுக கிட்டே நீங்க பேசறப்போ கொஞ்சம் நிதானமா மத்தவங்களுக்கு அதிகம் கேட்காத மாதிரி பேசுங்கப்பூ.. பேசற விசயம் ‘சப்பை’ மேட்டரா இருந்தாக் கூட ‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?
சில சமயம் எசகு பிசகா உங்க சம்சாரம் கூடவோ இல்லை சம்சாரம் ஆகப்போற அம்மணிக கூடவோ அவுகளுக்கு துணியோ இல்லை கழுத்துல காதுல போட்டுக்கற மணியோ வாங்க போறப்போ அங்கன வாங்க வர்ற சக அம்மணீஸ் சிலபேரு உங்க நாக்கோட நீளத்தை இஞ்ச் டேப் வைக்காக கொறறயா சோதிப்பாக. கொஞ்சம் ஏமாந்து நீங்க அவுக அழகுலே லயிச்சு லேசா லோகத்தை மறந்தீங்கன்னு வைங்க... அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. உங்க இமேஜ் சொல்லாம கொள்ளாம ' பப்பரக்கா' னு டேமேஜ் தான்.. இந்த மாதிரி சமயத்திலேதான் நீங்க " கொல கொலயா முந்திரிகா " formula வை follow பண்ணனும். எப்படீன்னா.. உங்க அம்மணிகிட்டே எடுக்கற பொருளும் நீங்க பார்க்கற பிகரும் ஒரே ஆங்கிள்ள இருக்கர இடமா கொஞ்சம் மெனகெட்டு தேடி புடிச்சு நின்னுகிட்டு அப்ப அப்ப அம்மணி கேட்கற " நல்லாருக்கா..? " கேள்விக்கு " இது கலர் சரி இல்லை.. இது அது நல்லா இல்லை.. இருக்கு.." இப்படி ramdom ஆ மாத்தி மாத்தி பதில் சொல்லிகிட்டே இருந்தீங்கனா போதும்.
எப்படியும் அவுக நீங்க சொல்லுறதை வாங்கப்போறது கெடையாது... ஆனாலும் உங்க கருத்து வேணும்... அதனால நீங்க பேசிகிட்டே உங்க வேலையையும் பார்த்துக்கலாம்.. நல்ல பேரும் side ல வாங்கிகிட்டு உங்க மனசுக்கு புடிச்ச ' வல்லிய ' ஜொள்ளும் மானாவாரியா விடலாம்... !!! எப்படி..?
என்னா சிங்கங்களே அசிங்கப்படாம ஜொள்ளுவுடுறது எப்படின்னு ஏதோ என்னோட சிற்றறிவுக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்லி இருக்கேன்.. அல்லாரும் சத்தம் காட்டாம படிச்சுபுட்டு practicals க்கு கெளம்புங்கப்பூ...

Saturday, October 09, 2010

எந்திரன் - கமலேநடித்திருந்தால்?


1) ரோபோ மாதிரியே இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு இயந்திரத்தனமான அசைவை படம் முழுக்க முகத்தில் காட்டிக்கொண்டே இருந்திருப்பார். அவர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடிக்க, இவ்ளோ வேலை செய்கிற ரோபோ இதை மட்டும் ஏன் இப்படி செய்கிறது? என்று நாம் விமர்சித்திருப்போம். உ.தா. அன்பே சிவம் - வெட்டுப்பட்ட மீசை.

2) ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.

3) ரோபோ அறிமுகக்காட்சியில், ”கடவுள் இருக்காரா? இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லைன்னு சொல்ல மாட்டேன். இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று பதில் சொல்லி குழப்பியிருக்கும்.

4) வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ரோபோ வேடத்திற்கு குரல் கொடுக்கும்போது ஒரு தகர வாய்ஸ் கொடுத்திருப்பார்.

5) நடனக்காட்சிக்கும், சண்டைக்காட்சிக்கும் டூப் போடவோ, மாஸ்க் போடவோ, கிராபிக்ஸ் செய்யவோ மறுத்து, இதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து அவரே செய்திருப்பார்.

6) இப்ப ரோபோவை இயந்திரமாக காட்டும்போது, கிராபிக்ஸில் காட்டியுள்ளார்கள். கமல் நடித்திருந்தால், கிராபிக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மேலே மெட்டாலிக் தகடு பதித்துக்கொண்டு உள்ளூக்குள் இருந்துகொண்டு அவரே இயந்திரமாகவும் நடித்திருப்பார்.

7) ரோபோவை வெட்டிப்போடும் காட்சியில், விஞ்ஞானியாகவும், துண்டாக கிடைக்கும் எந்திரனாகவும் கமல் நடித்திருக்கும் நடிப்பைப் பார்த்து, தியேட்டரே கண்ணீரில் மிதந்திருக்கும்.

8) இறுதிக்காட்சியில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொல்வது ‘பாசிசமாக இருக்கிறதே?’ என்று இயக்குனரிடம் விவாதித்திருப்பார்.

9) டைட்டிலில் வசனம் என்று அவருடைய பெயரும் வந்திருக்கும்.

10) டைட்டிலில் பானு பெயர் வந்த இடத்தில் கௌதமி பெயர் வந்திருக்கும்.

11) சிட்டி வெர்ஷன் 2.0 கேரக்டருக்காக, பத்து மணி நேர மேக்கப்பில் அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பார்.

12) விக் வைத்து நடிக்காமல், முடியை குறைத்து, பிறகு வளர்த்து வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். இதனால், படத்தை முடிக்க இன்னும் ஒரு வருடம் அதிகமாயிருக்கும்.

13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின் கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில் சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும் படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

14) படம் நன்றாக வந்திருக்கும்பட்சத்தில், விமர்சகர்கள் அனைவரும் ஷங்கரைவிட கமலை புகழ்ந்திருப்பார்கள். ”கமலை விட்டா, இந்த படத்தில் நடிக்க ஆளே இல்லை!” என்று சொல்லியிருப்பார்கள்.

15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல், உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.

என்ன அப்படித்தானே?

அடுத்தது, அஜித் நடித்திருந்தால்?

யாராவது சொல்லுங்களேன்.