Sunday, January 23, 2011

ஒரு எச்சரிக்கை!


என நண்பர் என்னையே தூக்கிப்போட்டு தாண்டி சத்தியம் செய்தமையால் வேறு வழியின்றி படத்திற்கு செல்ல நேர்ந்தது. படத்தின் கதையென்னவோ வசீகராவில் நாலு ஸ்பூன், காதலுக்கு மரியாதையில் ரெண்டு ஸ்பூன், துள்ளாத மனமும் துள்ளுமிலிருந்து ஒரு சிட்டிகையென இது வரை விஜய் நடித்த நல்ல படங்களின் கதைகளையே கலந்து கட்டி ரீமேக்கியிருப்பது தெரிந்தது. பாவம் விஜய் இதுவரை தெலுங்கு மலையாள படங்களை மட்டுமே ரீமேக்கி வந்தவர், இப்போது அவர் படங்களை அவரே நடித்து ரீமேக்குகிற துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருப்பது சன்பிக்சர்ஸின் சதியாக இருக்கலாம்.

படத்தின் கதை இரண்டாபாதியின் இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. அதுவும் அடுத்த சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அதற்குபின்னும் தேவையில்லாத காட்சிகளால் படம் நீண்டுகொண்டே போவது நல்ல தூக்கமாத்திரை.

படத்தின் பாடல்களில் யாரது யாரது.. தவிர்த்து மற்ற எல்லாவுமே தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட டப்பிங் பாடல்களின் தரத்தில் அருமையாக இருந்தன. 

ஒரு பாடல் காட்சியில் துணிவே துணை ஜெய்சங்கர் கெட்டப்பில் தலையில் குருமாவை கொட்டியபடி விஜய் வருகிறார்.  தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.
படம் முடிந்த பின் நண்பரிடம் கேட்டேன் படம் எப்படி பாஸ்.. ஆஹா சூப்பர்.. அழுதுட்டேன் என்றார். தியேட்டரில் சில இளசுகளோ என்ன இழவு படம்டா என நொந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.புரட்சி வேட்கை கொண்டவர்களும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்களும் காவலனை ஒரு முறை பார்க்கலாம். 

Friday, January 21, 2011

usb டிவைஸ்களை கட்டுபடுத்த





உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.

பயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள்
. கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled இருந்தால் அதை Disable ஆக மாற்றி சேமித்து விட்டால் பின்னர் USB வழியாக எந்த கருவியும் செயல்படாது.


சில சமயம் USB போர்ட்டில் இயங்கக்கூடிய அச்சடிப்பான் இருந்தால் அதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. இதற்கு நீங்கள் பயாஸில் எந்த மாற்றமும் செய்யாமல் Start – Run சென்று Regedit என்று தட்டச்சு செய்யுங்கள். Registry திறக்கப்பட்டவுடன் கீழ்வரும் பகுதிக்கு செல்லுங்கள்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Services\USBSTOR




Usbstor ஐ கிளிக் செய்தால் வலது பக்க சன்னலில் உள்ள Start என்பதை தெரிவு செய்து அதன் மதிப்பை 4 என்று கொடுத்து விட்டு ரெஜிஸ்ட்ரியில் இருந்து வெளியேறி கணிணியை Restart செய்யவும்.பின்னர் உங்கள் கணிணியில் யாரேனும் பென் ட்ரைவ் போன்றவற்றை செருகி எதையும் நகல் எடுக்க முடியாது. மற்றபடி நீங்கள் Usb பிரிண்டர் இணைத்திருந்தால் அது மட்டும் வேலை செய்யும். மறுபடியும் வேண்டுமானால் அதன் மதிப்பை 3 ஆக மாற்றவும்

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்


பீர் அருந்துவது உடலுக்கு நல்லது (நல்லா கவணிக்கவும் அருந்துவது)வயிறு முட்ட குடித்து விட்டு மட்டையாயி எங்காயாவது போயி மல்லாந்து விழுந்து 

 “போடுக தண்ணி போடுக போட்டப் பின்
ஆடுக அதற்கு தக”
என்று புதுக்குறல் சொல்லக்கூடாது

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:

பீர் குடிப்பது மன அழத்தத்தை குறைக்கிறது. உண்மை பொதுவாகவே ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான ,மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்


பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது .1982-1996 இந்த வருட இடைவெளியில் நடட்தப்பட்ட சோதனைகளில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் 20-50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவாக உள்ளதாம்

பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cloesterol (H D L - High Density Lipoprotein) தருகிறது எனவே இது இரத்த தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது (Clotting)

பீரில் நிறைய நார் சத்து உள்ளது (Fiber) இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக உடலுக்குத் தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்

பீர் வைட்டமின் செறிந்தது (பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) பீரிலிருந்து பல வகைகள் விட்டமின்கள் கிடைக்கின்றன மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் பாஸ்பரஸ் பயோட்டின் போலேட் மற்றும் விட்டமின் B6, விட்டமின் B12

பீர் மாரடைப்பை தடுக்கிறது 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக் குறைவாம். காரணம் அளவான மது மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடையின்றி நடக்கிறது இதனால் மிக சிறிய மெல்லிய இரத்தக் குழாய்கள் உள்ள மூளையில் இரத்தம் கெட்டியாகமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புகள் அதிகரிக்கிறது

பீர் உங்கள் மூளையை இளைமையாக வைக்கிறது 2001 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளின்படி அளவான மது பழக்கம் உள்ள ஆண், பெண் இருவருக்கும் மூளைச் சிதைவு - Mental Impairment என்ற மூளை தளிர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது

பீர் நமது கல்லீரலுக்கு நல்லது மிதமான மது கல்லீரலில் உள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்கள்களை அகலபடுத்துவதால் அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன. This is Beer Net Publication , April 2001 Bilogical Institute

பீர் தூக்கம் இன்மையை அகற்றும் (  Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறது

பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் அவர்களின் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள், மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைத் தடுக்கிறதாம்.

இணையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்


நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இணையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.
இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.
இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

Thursday, January 20, 2011

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம்தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

09: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

08: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்குதெரியவே மாட்டாங்க

06: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

05: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

04: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

03: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -லஇருந்துட்டேயிருந்துருப்பாங்க

02: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

01: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக்பண்ணிட்டு...........
silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க..



( paடத்துல எத்தன டால்பின் மறந்சுருக்குனு கண்டுபிடிங்க பாக்லாம் வேற எதுனா தெரிஞ்ச நா பொறுப்பில்ல )

Monday, January 10, 2011

காவலன்

1 : இந்த படம் நூறு நாள் ஓடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.


2 : நூறு நாள் என்ன நண்பா ..., ஐநூறு நாளே ஓடும்.

1 : என்ன டா ....காமெடி பன்ற ???

2 : கொய்யால .., முதல்ல யாருடா காமெடி பண்ணுனது ?

என் தீப்பெட்டிய பாத்தியா ?

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........




என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........

(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )



"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"



"நல்லா இருக்கண்டா ..... "



"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"



"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "



"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"



"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "



"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"



"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "



"சரி அதுக்கு என்ன ?"



"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "



(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )



"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "



"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "



"சரி ......"



"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "



"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "



"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "



கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி



"என்னடா மாப்ள ?"



"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"



"டேய் ............


"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "



"@#@#%%$%%>>>>>......................."

Thursday, January 06, 2011

நண்பேண்டா...!

என் குவாட்டர்களும்


நீ வாங்கிய குவாட்டர்களும்

என் குவாட்டர்களாகவே

இருப்பதைக் கவனித்தாயா?!



நண்பேண்டா...!



***



எனக்கான குவாட்டர்

எல்லா இடங்களிலுமிருந்து

வந்து கொண்டேயிருக்கிறது

நானோ

உனக்கான பாட்டலோடு

மன்றாடிக்கொண்டிருக்கிறேன்



நண்பேண்டா...!



***



மாடியை கிழித்து

அடியில் இறங்குகிறது

இடியோசை

நீ அடித்து கிழித்து

என்னை சுருக்கும்

தருணங்களை

நினைத்துக்கொள்கிறேன்.



மனைவிடா...!



***



எங்கு அனுப்பி வைத்தாலும்

இதயத்திலே முளைக்கின்ற

பேய்க்குட்டி..

நீ!



காதலிடா...!



***



துணைவி யெனும்...

மதயானை

எதைக் கொண்டு அடக்க

எதைக்கொண்டு மறைக்க?!



நோ காமன்ட்ஸுடா...(ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......)



***



மொழி

கலைத்து ஆடும்

என் தத்துவ

விளையாட்டை

நீ போதையுளறலென்கிறாய்…!



என்னமோ போடா...!

***