Thursday, March 12, 2009

இனியவளே!


இனியவளே!
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட
தோழியே!
என் மீது காதல்
உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை
சுமந்த படி
துடிக்கும் இதயத்திற்கு
நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில்
என்னை
மனிதனாகவும், பைத்தியமாகவும்
மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே....!

எனக்குள் நானே


நீ
புன்னகைக்கும் போதெல்லாம்–என்னுள்
புதுரத்தம் பாய்கிறது 
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?


தினமும் எழுந்து
சிந்திக்கிறேன் பெண்ணே –உன்
சிரிப்புக்குவமைகளை
கடைசியில் என்னையே நான்
நிந்தித்துக்கொள்கிறேன்
வராத வார்த்தைகளுக்காய்!

நிட்சயமாய்ச் சொல்வேன்
நீதானெனக்குச்
சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என்
வாழ்வின் மனஇறுக்கங்களால்
தோன்றிய வேதனைகளுக்கு நீ
மரண தேவதை!

அதுவோர் காலங் கண்ணே
எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான் மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை

நினைத்துப் பார்க்கிறேன்-நாம்
பேசிக்கொண்டதைவிட
பிரியமாகச் சிரித்துக்கொண்ட
பொழுதுகள் ஏராளம்-ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்!

விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில் என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே சிரித்துக் கொள்வதற்காய்!

நிலவு


அவளுக்காக அர்ச்சனை செய்ய 
கோவிலுக்கு சென்றேன்.
அங்கு குருக்கள் கேட்கிறார் 
என்ன நட்சத்திரம் என்று 
பாவம் அவருக்கு தெரியுமா...?
அவள் "நிலவு" என்று...!

காதல்


பனி பட்ட இடமெல்லாம் 
குளிர்ச்சி 
உளி பட்ட இடமெல்லாம் 
சிற்பம் 
உன் விழிபட்ட 
என் நெஞ்சமெல்லாம் 
காதல்

ஆணாக மாறிவிடு,

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

உன் நினைவுகள்


நினைவோடு தான் பேச முடியவில்லை...
கனவோடு பேசலாம் என்றால்,
உன் நினைவுகள் என்னை
தூங்க விடுவதில்லை....

புவி ஈர்ப்பு விசை


ஆப்பிள் கீழே விழுந்தவுடன் 
நியூட்டன் 
கண்டுபிடித்தார் 
புவி ஈர்ப்பு விசையை 
நான் உன்னில் விழுந்த 
பிறகு தான் கண்டறிந்தேன் 
உன் விழி ஈர்ப்பு விசையை 
ஆப்பிள் எழவுமில்லை 
நான் மீளவுமில்லை 

சுவாசிக்காமல்..........


காதலை நேசிப்போம் 
கல்யாணத்தை யோசிப்போம் 
நட்பை சுவாசிப்போம் 
நேசிக்காமலும் யோசிக்காமலும் 
இருக்கலாம் ஆனால் 
சுவாசிக்காமல்............

பேசி விடுகிறேன்


எப்போது வாய்க்கும்
உனக்கும் எனக்குமான
அந்த இனிய பொழுதுகள்.......!
நான் பேச எத்தனிக்கும்
எல்லா நேரங்களிலும்
நீ யாரிடமோ பேசியபடி.......!
உன்னோடான என் பேச்சு
எப்போது துவங்கும் என்றே தெரியாத போது
"அப்புறம்"
என்றபடி நீ பேச்சை நிறுத்துவாய்......!
ஆரம்பப் புள்ளியையே
நான் தேடிக்கொண்டிருக்க
நீ அதையே முற்றுப்புள்ளியாய்
முடிக்கப் பார்க்கிறாய்.......
பேசுகிறேனே கொஞ்சம்.......
வினாடி நேரமாவது
என்னை விழிகள் விரிய பாரேன்...!
பேசி விடுகிறேன்
என் கண்களால் மட்டுமாவது..........

எனக்குள் தேம்புகிறது


சொல்ல நினைக்கும்
மனதும்
வெளிவர மறுக்கும்
வார்த்தைகளும்
போரிடும் போதெல்லாம்
மௌனமாய்
எனக்குள் தேம்புகிறது
என் காதல் .......

கடந்தகால நினைவு




ஸ்நேகிதியே
எங்கோ ஓர்
பௌர்ணமி நாளில்
தூங்காத இரவுகளில்
நீங்காத நினைவுகளாய்
என்னுடன் உறவாடும்
நம் ஸ்நேகம்

முதலில் பார்த்தும்
மலராய் சிரித்ததும்
அப்போது
இன்பச்சாரலை
அள்ளி வீசினாலும்....

பின்னாளில் வரும்
இடிமழையாய்
நம் பிரிவை
அந்நாளில் நாம்
உணரவே இல்லை

பிரிவெனும் பேரிடி
தாக்கிடும் என்று
தெரிந்திருந்தும்
மலை எதிர்க்கும்
மலர்களாய் நாம்
மனங்கிறங்கி லயித்திருந்தோம்

பாட வேளையில்
பகிர்ந்து கொண்ட
பசுமை நினைவுகள்
இன்னும் என்னுள்
இறந்து விடாமல் ... என்னை
உறங்கவும் விடாமல்

விளையாட்டு பேச்சும்
விஷமக் குறும்பும்
இன்றும் எதிரொலியாய்
இங்கும் ஒலிக்குதடி

கொத்திப் பசியாற்றும்
மரங்கொத்திப் பறவையாய்
என் மனங்கொத்தித் தின்னும்
சிநேகப் பறவையடி நீ...!

எங்கோ ஓர்
இருண்ட இருளில் இரையும்
சுவர்க்கோழி போல்
இம்சிக்கிறது ...நம்
கடந்தகால நினைவு

நீயுதிர்த்த வார்த்தைத் துளியில்
நிறைவுபெற்ற
நீர்நிலையாய் நம் நட்பு
அதில் நீந்திக் களிக்கிறது
என் நினைவு

மறவாதே என்றாயே
என் மனம
உன் நினைவுப் பச்சைகளை
அல்லவா
சுமந்து கொண்டிருக்கிறது ..

என் தேவதை!!!!!


தொலை தூரத்தில்
வானமாம்....
நம்ப முடியவில்லை
பக்கத்தில் இருக்கிறாள்
என் தேவதை!!!!!!

“என்னவள்”


கோவிலில் அழகு சிலைகள்
அனைத்தும் அசையாதிருக்க!
ஒரு சிலை மட்டும் நகரக்கண்டேன்
“என்னவள்” கோவிலை சுற்றி வரும் பொழுது.

கண்சிமிட்டலும்


மௌனத்தை
மொழியாக்கி
அவள் விழிகளை
உரையாற்றச் சொல்லுங்கள்
கண்சிமிட்டலும்
கவிதையாகக் கூடும்....

நான் பிறந்ததே


நீண்ட தயக்கத்திருக்கு
பிறகு
உன்னை விரும்புகிறேன்
என்றேன்
மெலிதாய் புன்னகை செய்தாய்
ஏன் என்றேன்
அட போட
நான் பிறந்ததே உன்னை
காதலிப்பதற்கு மட்டும் தான்
என்றாய் !!!

விழி பேசும் மொழி


காதலுக்கு மொழி தேவையில்லை 
என்பது உண்மை தான் 
அவள் வாய் திறந்து பேசும் மொழியை விட 
அவள் விழி பேசும் மொழி அழகு

விளை நிலம்


உன்னிடம் பலமுறை வந்து எதுவும்
என்ன பேசுவது என்று தெரியாமல்
திரும்பி விடுகிறேன் ?
எத்தனை முறை உழுதாலும்
என்ன விதைக்க போகிறார்கள்
என்று தெரியாமல் கிடக்கும்
விளை நிலம் போல ??

அவள் உருவத்தை


உருவத்தை பார்த்த அவள்
என் உள்ளத்தை பார்க்க
மறந்து விட்டாள்
அவள் உள்ளத்தை பார்த்த
என்னால் அவள் உருவத்தை
மறக்க முடியவில்லை..... 


எனதருமை காதலியே


கள்ளி மலர் இதழுக்குள்
தேன் துளியை உறிஞ்சத் துடிக்கும்
வண்டாய்
தூண்டில் இரையை
தின்னத் துடிக்கும்
மீனாய்
பல்லக்காய் நினைத்து
இந்த பாடைக்குள்
தஞ்சம் புகுந்தேன்

நான் புதையுண்ட இடத்தில்
பூத்துக் குலுங்கும்
மலரில் ஒன்று
உன் தலை பாகத்தை
அலங்கரிகக் கடவாய்
எனதருமை காதலியே !!!!!!!!!!!!!!!!!!!!!!!