Wednesday, August 19, 2009

கடவுள் நம்பிக்கை

ஒரு அமாவாசை இரவு , ஒருத்தன் மலை உச்சியில் இருக்கும் கடவுளை பார்க்க சென்றான் . அப்பொழுது அவன் நண்பன் கேட்டான் "ஏன் பகலிலே போகக்கூடாதா?"

அதர்க்கு அவன் கடவுள் எனக்கு வழி காட்டுவார் என்றான்

ஒருவழியாக அவன் உச்சியை அடைந்துவிட்டான் அப்போது ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தான் . அது ஒரு பெரிய பள்ளம் , ஒவ்வொரு மரத்தின் மீதும் மோதி மோதி கீழே விலும்போது கடவுளே என்னை கப்பத்து என்று கத்தினான் ,

அப்பொழுது ஒரு மறக்கிலையை பிடித்து தொங்கிக்கொண்டே கடவுளை திட்டினான் . அப்போது கடவுள் அவனிடம் கிளையை விட்டுவிடு நான் கப்பத்துறேன் என்றார் . சுத்தி சுத்தி பத்தான் , ஒரே இருட்டு .

அவன் கடவுளை நம்ப தயாரா இல்லை . கிளையை விடாமல் விடிய விடிய தொங்கிக்கொண்டே இருந்தான் .

ஒருவழியா விடிந்தது , கீழே பார்த்தவனுக்கு பயங்கர அதிர்ச்சி ,

அவன் காலுக்கும் கீழ அரையடி துரத்தில் தரை இருந்துச்சாம் .

1 comment:

  1. யாரும் முழுமையாக கடவுளை நம்புவதில்லை என்பது உண்மை

    ReplyDelete