Wednesday, June 27, 2012

சகுனி!






இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே யதார்த்த படங்களாக பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிபோச்சு.. விளிம்பு நிலை மக்களின் சொல்லப்படாத பக்கங்களை புரட்டி புரட்டி.. விரல்கள் பத்தும் வீங்கிபோச்சு. அழுக்கு முகங்களையும் இருட்டு மனிதர்களையும் ரத்தம் சொட்டும் அரிவாள்களையும் பார்த்து பார்த்து கிட்டத்தட்ட அரைமென்டலாகித்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். இதுமாதிரி நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக மூச்சுவிடவும் உழைச்ச களைப்பு தீரவும் வீங்கின நெஞ்சை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்... நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, நிறைய காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ், ஒருகவர்ச்சி டான்ஸ் என நல்ல மசாலா படமொன்று வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம்.

உன்னதமான ஆகச்சிறந்த மசாலா படம் வேண்டி பெருமாள் கோயிலுக்கு பொங்க வைத்து கடாவெட்டி பிரார்த்தித்தோம். தவமாய் தவமிருந்தோம். இந்த கடவுள் இருக்கிறாரே.. கடவுள்.. கொஞ்சம் கூட கருணையேயில்லாதவர். முதலில் விக்ரம் வாழ்ந்த ராஜபாட்டையை நமக்கு பரிசளித்தார்.. அய்யோ அம்மா.. என்று கதறினோம்.. நம்முடைய குரல் கடவுளின் காதுகளை எட்டவேயில்லை. பிறகு சிம்பு நடித்த ஒஸ்தியை வழங்கினார்.. கடவுளே எங்கள விட்டுடு.. தெரியாம கேட்டுட்டோம் என தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டோம்..

எங்களுக்கு மசாலாவும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் ஆளவுடு என கெஞ்சினோம்.. ஆனால் கொஞ்சம் கூட இதயத்தில் ஈவு இரக்கமேயில்லாத கடவுள் இதோ இப்போது சகுனியை கொடுத்திருக்கிறார்.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. கடவுளே... முடியல..

‘’மைநேம் இஸ் ரஜினி.. ஐயாம் கமல்’’ என மிரட்டலாக.. ட்ரைலரிலேயே அடடே போடவைத்த சகுனி சென்ற வாரம் ரிலீஸானது. உதயம் தியேட்டரில் நுழையும்போதே ஒரே கூச்சல்.. ஆராவாரம்.. குத்தாட்டம்தான்.. கும்மாளம்தான்.. அடேங்கப்பா கார்த்திக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யகுறியை தலைக்குமேல் போட்டு உள்ளே நுழைந்தோம்.. படம் ஆரம்பித்து. பத்தே நிமிடங்கள்தான்.. ஜஸ்ட் டென்மினிட்ஸ்.. கூச்சலும் கும்மாளமும் அடங்கியது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்னும் பாடலுக்கேற்ப நாம் இருப்பது  தியேட்டரா அல்லது கண்ணம்மாபேட்டை சுடுகாடா என்கிற சந்தேகமே வந்துவிட்டது!

ஓக்கே திஸ் டைரக்டர் நமக்கு வேற ஏதோ வித்தியாசமான படம் காட்டப்போறார் போல.. நாமதான் வேற எதையோ எதிர்பார்த்து வந்துட்டோம்.. லெட் அஸ் கான்சென்ட்ரேட் ஆன் திஸ் மூவி என்று மும்முரமாக படத்தை பார்க்கத்தொடங்கினோம். கடவுள் சிரித்தார்!
தன் வீட்டை இடிக்க போகிறார்கள் என மந்திரியிடம் மனு கொண்டு போய் கொடுக்கிறார் ஹீரோ.. மந்திரி மனுவை வாங்கிக்கொள்கிறார்.. ஹீரோ மகிழ்ச்சியாக மந்திரிவீட்டு வாசலில் இருக்கிற தள்ளுவண்டி பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிடுகிறார்.. பஜ்ஜி ஆயிலை கசக்க பேப்பரை எடுத்தால் ஹீரோ கொடுத்த மனு! ஹீரோ அப்படியே ஷாக் ஆகிறார். வாவ் வாட் ஏ சீன்.. நூறாண்டு இந்திய சினிமா இப்படியொரு பிரமாதமான காட்சியை கண்டதுண்டா! இதுமாதிரி பல காட்சிகள் அடங்கிய அற்புதமான திரைப்படம்தான் சகுனி!

படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவியாகவே திரிகிறார் ஹீரோ.. எலி ஏன் அப்படி திரியுது என்றால் இரண்டாம்பாதியில் முதலமைச்சரை எதிர்த்து சண்டை போடுகிறார். முதலமைச்சரே இவரை பார்த்து அஞ்சுகிறார். எதிர்கட்சி தலைவரை முதல்வராக்குகிறார். அதற்காக அவர் செய்யும் சகுனி வேலைகள்.. தமிழ்சினிமா காணாதது! இறுதியில் ஸ்டேட் கவர்மென்ட்டு முடிந்து சென்ட்ரல் கவர்மென்ட்டும் அவரை அழைப்பதோடு படம் முடிகிறது. செகன்ட் பார்ட் ஹிந்தியில் போல.. நாம தப்பிச்சோம்.. பானிபூரி பாய்ஸ் செத்தானுங்க... மூணாவது பார்ட் ஹாலிவுட்டா இருக்கலாம்.. வெள்ளை மாளிகையை காப்பாற்ற குஷ்பூவை அமெரிக்க அதிபரா ஆக்குவார்னு தோணுது!

சந்தானம் படம் முழுக்க பேசிக்கொண்டேயிருந்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று யாரோ இயக்குனரிடம் சொல்லித்தொலைத்திருக்க வேண்டும்.. படம் முழுக்க வாய் வீங்க வீங்க சந்தானம் பேசுகிறார். சில இடங்களில் அவர் மட்டும்தான் படத்தையே காப்பாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பல படங்களிலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பது போல வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதையெல்லாம் யாரும் எதிர்த்து போராடமாட்டார்களா?

ஹீரோ கார்த்தி சிரிச்ச மூஞ்சியாகவே ஒரே ரியாக்சனுடம் படம் முழுக்க வருகிறார். விஜயை போலவே வளைந்து வளைந்து நடனமாடுகிறார்.. பஞ்ச் டயலாக் பேசுகிறார்! நல்ல வேளை இந்த படம் செம ஃப்ளாப்! இல்லாட்டி போன இன்னும் பத்து படத்திலாவது இதேமாதிரி பஞ்ச் டயலாக் பேசி டான்ஸ் ஆடி நம்மை தாலியறுத்திருப்பார்! விஷால்,பரத் வரிசையில் இந்த தளபதியும் இணைந்து நாட்டுக்கு நன்மை செய்வார் என்பது தெரிகிறது.
படமும் சரியல்லை.. ஹீரோயினும் சரியில்லை.. இயக்குனருக்கு ஆன்ட்டி போபியோவோ என்னவோ ரோஜா,ராதிகா என சீரியல் ஆன்டிகளை வேறு அள்ளிக்கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். ம்ம்.. என்னத்த சொல்ல.. வில்லனாக பிரகாஷ்ராஜ் இந்தப்படத்திலும் முட்டாளாகவே வாழ்கிறார். கத்துகிறார். சவால் விடுகிறார். டேய்.. என்கிற வார்த்தையை விதவிதமான மாடுலேஷன்களில் சொல்கிறார்.

படத்தில் டெக்னிக்கல் சமாச்சராங்களை கவனிக்கவே முடியாத அளவுக்கு படம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால் அதைப்பற்றியெல்லாம் எழுதவே தோணலை. படத்தின் இயக்குனர் சிறந்த வசனகர்த்தாவாக இருக்கலாம். படத்தின் பல வசனங்கள் நச்சென்று இருந்தன.

இந்த உலகப்படம் பார்க்கிற அறிவுஜீவிகள்தான் மசாலா படம் பார்க்கிறவனை முட்டாளாக நினைத்து பீட்டர் விடுவதை இச்சமூகம் கண்டிருக்கிறது.. வரவர மசாலா பட இயக்குனர்களே தன்னுடைய ரசிகனை முட்டாளாக நினைக்கத்தொடங்கியிருப்பது மசாலா பட ரசிகர்களை வெறிகொள்ள செய்துள்ளது..

பைனலாக ஒன்றே ஒன்றுதான்.. கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!

Sunday, June 24, 2012

ஆண்GAL




ஆயிரம் தான் சொல்லுங்க இந்த பொண்ணுகளுக்கு இருக்குற மவுசு இந்த பசங்களுக்கு கெடையவே கெடையாதுங்க. பாவங்க இந்த பசங்க. என்னதான் ரவுசு பண்ணிகிட்டு டோல்லடிச்சுகிட்டு லோலாக்கை பார்த்துகிட்டு அலைஞ்சாலும் ஒரு பொண்ணுக்கு இருக்குர influence ஒரு பையனுக்கு கெடைகிறது இல்லை ! படிக்கிற இடத்திலே இருந்து வேலை செய்யுர இடத்திலே வரைக்கும் பையனா பொறந்தா என்ன கஷ்டம் என்னா கஷ்டம் ??

அதுக்கு காரணம் இந்த பசங்களே தாங்க. உங்களுக்கு கோடிங்ல ஏதோ கொஞ்சம் டவுட்டுன்னு இந்த பசங்களை போய் கேக்கறீங்கன்னு வைங்க. “ அட இது தெரியாதா? போடா போய் இந்த டாக்குமெண்டைப்ப படின்னு பொத்தாம் பொதுவா ஒரு மார்கமா உங்களுக்கு ஒரு national higway ய காட்டிட்டு போய்டுவாய்ங்க. டேய் இதை நீதான் படிச்சிட்டயேடா சொல்லி கொடுக்க ஒரு 5 நிமிசம் ஆகுமான்னு மனசுக்குள்ளேயே குமுறிகிட்டு அலைய வேண்டியதுதான். இதே கேள்விய ஒரு பொண்ணு வந்து “ இந்த கோடிங்க கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் ப்ளீஸ்! “ ன்னு ஹஸ்கி வாய்ல treble ஏத்தி கேட்டுச்சுன்னு வைங்க அவ்ளோதான் நம்ம ஆளு சும்மா ரம்மு குடிச்ச குதிரை குட்டி கணக்கா இருக்குற firewall ஐ எல்லாம் பேத்துகிட்டு கூகுள், அல்டாவிஸ்டான்னு சும்மா அலாஸ்காவுக்கே போய் ‘கோடிங்’க எடுத்துடுவாய்ங்க. ஏம்பா கண்ணுகளா இப்படி வாழமட்டையிலே கால் வச்ச மாதிரி தொபுக்கடீர்னு இந்த பொண்ணுங்க சிரிப்ப பார்த்து பல்ட்டி அடிக்கறீங்க? அட இதையே ஒரு பையன் கேட்டா மட்டும் ஏண்பா இப்படி வெளகெண்னைய லிட்டர் லிட்டரா குடிச்சவன் மாதிரி மூஞ்சை வச்சுக்கறீங்க ?

அப்புறம் இந்தப் பொறந்தநாள் கலாட்டா இருக்கே !! ஒரு பொணுக்கு பொறந்த நாளுன்னா போதும். சும்மா ஆளாளுக்கு முந்துன நாளுல இருந்தே சும்மா கரகாட்டம் ஒயிலாட்டம்னு சலங்கைய கட்டிகிட்டு சும்மா மாங்குயிலே பூங்குயில்லேன்னு ஜல்லு ஜல்லுன்னு குத்தைப்போட்டாய்ங்கன்னா சும்மா நாளுநாளைக்கு வாழ்த்தறேன்னு தேத்தறேன்னு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு குத்தைப்போடுவாய்ங்க பாருங்க ஆஹா என்னா ஒரு வேகம் என்னா ஒரு அக்கரை தெரியும் தெரியுமா?? பயபுள்ளைங்க ஓடிப்போயி கேக்கு வாங்கி வெட்டறது என்னா? ஆள் சைஸுக்கு க்ரீட்ங்ஸ் கார்ட் வாங்கி கொடுக்கறது என்னா? சும்மா கெடாவெட்டி பொங்கல வச்சு பொண்ணுங்க மனசுல பட்டறையப்போட சும்மா பொலபொலன்னு இந்த பசங்க பண்ணுற கலாட்டா இருக்கே என்னத்தை சொல்ல? இதுவே ஒரு பையனுக்கு பொறந்த நாளுன்னா டேய் மாப்ளே ஹாப்பி பர்த்டேடான்னு கைய மட்டும் கொடுத்துட்டு எங்கடா குவாட்டர்ன்னு காலைல இருந்தே மெதக்க ஆரம்பிச்சுசுடுவாய்ங்க ! சாயங்காலம் வந்துச்சோ இல்லையோன்னு சும்ம ஊத்து ஊத்துன்னு உத்திகிட்டு திரும்ப மப்பிலே தங்களோட மன்மதலீலைகளை அரங்கேத்தி விடுர அலப்பரை இருக்கே ??? ஏம்பா கண்ணுகளா இந்த பொண்ணுங்கன்னா மட்டும் கேக்கை தூக்கிகிட்டு பேக்கு மாதிரி காவடி எடுக்குறீயளே அதையே பசங்கன்னா மட்டும் அவனுகளை ஊத்தி ஊத்தி கொடுக்கற ‘பார்டெண்டரா’ பக்குறீயளே ஏன்பா??

சரி ஏண்டா நம்ம ஆண்குலங்கள் எல்லாம் இப்படி பொண்ணுங்க முன்னாடி மண்ணைப் பொராண்டிகிட்டே இருக்காய்கன்னு நானும் இருக்குற கொஞ்சம் நஞ்ச மூளைய கசக்கிட்டு ரோசணை பண்ணிப்பார்த்தா..

டிரிங் டிரிங் டிரிங் ...
அட என் மொபைல் கூப்பிடர சத்தம் உங்களுக்கு கேக்குதில்ல? யாரு??...

அட இருங்கப்பூ நம்ம ப்ரெண்டு ஜென்சி பேசுது. மத்தியானம் பேசுனது, பாருங்க முக்கியமான விசயத்தை பத்தி எழுதிகிட்டு இருக்குறப்போ இந்த லூசு வேற போனைப்போட்டு உயிரை எடுக்குது, பேசாட்டி அது வேற கோச்சுக்கும். அப்புறம் அதுக்கு கேட்பரீஸ் வாங்கித்தந்து மாளாது. இருங்க பேசிட்டு வாரேன் சரியா ?? ஹிஹிஹிஹிஹி....

" சொல்லுடா என்ன விசயம்? "
.................................

" அட ஒண்ணும் முக்கியமான வேலை ஒண்ணும் பண்ணலைம்மா நீ பேசு "

Saturday, June 23, 2012

காதல்…

காதல்… மொழிக்கு அது ஒரு வார்த்தை, பெற்றோருக்கு அது தங்களோடு முடிந்துபோன ஒரு விடயம், சமூகத்துக்கு அது கலாசார மீறல், காதலிப்பவர்களுக்கு இதயத்தில் இறக்கை விரிக்கும் பட்டாம்பூச்சி…. இந்த காதல் மனிதகுலத்திற்கு ஒன்றும் புதிதல்ல. இன்று நேற்றல்ல மனிதன் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை இளமையாக இருக்கும் ஒரு சில விடயங்களுக்குள் இந்த காதலும் ஒன்று. காவியங்களிலும் ஓவியங்களிலும் வடிக்கப்பட்டு இருந்தாலும் எவருமே இன்றுவரை சரியான ஒரு வரைவிலக்கணத்தை காதலுக்கு கொடுத்ததாக தெரியவில்லை.

ஆனால் நமது சினிமா கலாசாரம் ஒரு புதிய வரைவிலக்கணத்தை வரைந்துகொண்டிருக்கிறது அல்லது அது மக்களால் காதலுக்கான வரைவிலக்கணமாக புரிந்துகொள்ளப்படுகிறது. அந்தவகையான ஒரு தவறான புரிதலால் இன்று வயசுக்கோளாறுகளுக்கு காதல் என்று பெயர் சூட்டி காதலை கொச்சைப்படுத்தும் அசிங்கங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆமா காதலைப்பத்தி கலாய்க்க வந்திட்டாராம் என்று யாரும் கடுப்பாகிடாதீங்க. இது காதலுக்கு எதிரான பதிவு அல்ல.

Teenage Love

பதின்மவயது காலப்பகுதி..... ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அதுவரை இருந்த தடைகளை உடைத்து சுதந்திர வானில் பறக்க விரும்பும் காலம். பெற்றோர்களின் முகத்தில் கவலை ரேகைகள் படிய ஆரம்பிப்பதும் அதே காலப்பகுதியில்தான். அந்த காலப்பகுதியில் பலமான அத்திவாரத்தை போட்டுக்கொண்டவர்களின் வாழ்க்கை சரிவதில்லை. ஆனால் ஏற்கனவே இருக்கும் அத்திவாரத்தையும் கிளறி எறிபவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமும் இல்லை. அப்படிப்பட்ட பருவத்தில் எல்லோருக்கும் பொதுவாகவே மனதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று பறக்க ஆரம்பிக்கும். அந்த பட்டாம்பூச்சி உண்மையில் ஒரு எதிர்ப்பாலின கவர்ச்சியின் தூண்டுதலேயன்றி அதற்கு பெயர் நிச்சயமாக காதல் இல்லை. அந்த எதிர்ப்பாலின கவர்ச்சிதான் காதலின் மூலகாரணம் என்பதை ஒத்துக்கொண்டாலும் வெறுமனே அதைமட்டும் வைத்துக்கொண்டு அதை காதலாக வரைவிலக்கணப்படுத்துவதை போல ஒரு முட்டாள்தனம் இருக்கமுடியாது. இந்த எதிர்ப்பாலின கவர்ச்சி சமுதாயத்தின் பார்வைக்கு பயந்து அல்லது சுயகட்டுப்பாடு மூலம் அடங்கிப்போவதுமுண்டு. அல்லது சில நேரங்களில் அலைபாய்ந்து அணையை உடைப்பதும் உண்டு.

பதின்மவயதில் பூக்கும் காதலுக்கு நண்பர்களின் உசுப்பேத்தல்களும் ஒரு காரணம். “மச்சி அவ உன்னைத்தாண்டா பார்க்கிறா” (பெண்களிடையே எப்படியோ எனக்கு தெரியவில்லை) இந்த ஒற்றை டயலொக் எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. நாலு பேர் சொன்னதற்கப்புறம் பார்த்தால் நமக்கும் ஏதோ அந்தப்பிள்ளை லுக்கு விடுறமாதிரியே இருக்கும். ஏனென்றால் இந்த வயசில நமக்கு ஒரு லவ்வர் தேவையே. (காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் வாறமாதிரியே இருக்கா? சத்தியமா அதுதாங்க உண்மை.)

Teenage Love

எனது நண்பர்கள் சிலரது அனுபவங்கள் எனக்கு ஒன்றை தெளிவாக புரியவைத்திருக்கின்றன. பதின்மவயதில் தோன்றும் ஹோர்மொன்களின் ஜாலத்தை மட்டுமே காதலாக கருதி களமிறங்கியவர்கள் அந்த காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வேதனைகளை சுமக்கிறார்கள். திடீரென்று பெற்றோர்களை அந்நியராக பார்க்கவும் அவளுக்காக அல்லது அவனுக்காகவே தாம் பிறந்ததாகவும் ஒரு தோற்றத்தை இந்த வயசுக்கோளாறு விதைத்து விடுகிறது. எல்லாம் இந்த சினிமா செய்த திருவிளையாடல்தான். கண்டதும் பற்றிக்கொள்வது, கையை வெட்டிக்கொள்வது, சூடு வைத்துக்கொள்வது என்று ஏகப்பட்ட வன்முறைகளால் காதல் என்ற மலரை கசக்கி முகர்ந்த நிலையாகி விட்டது. எனக்கு தெரிந்தவரையிலேயே எனது நண்பர்களில் சிலர் இந்த வயதுக்கோளாறு என்ற குளிர் ஜூரம் வந்து அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள்.

எனது நண்பர்களிலேயே தனது காதலியை காணவில்லை அல்லது அவள் கதைக்கவில்லை அல்லது அவளுக்கு காய்ச்சல் என்று சின்ன சின்ன விடயங்களுக்காக மின்னழுத்தியால்(Iron box) சூடு வைப்பவர்களையும் ஊசியால் கீறுபவர்களையும் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த பைத்தியக்காரத்தனத்தை எந்த வகையில் அடக்குவது என்று புரியவில்லை. அதே காதலைப்பற்றி காலங்கடந்தபின்பு கேட்டால் அது ஏதோ அறியாத வயசில புரியாத மனசில ஏற்பட்ட கவர்ச்சி (அவங்கட பாஷையில் JUST IMPRESSION) நான் இப்பத்தான் ஒருத்திய உண்மையா(SINCERE ஆம்) லவ் பண்ணுறன் மச்சான் என்று மீண்டும் இன்னொரு நேர்த்திக்கடன் படலத்தை ஆரம்பித்து விடுகிறார்கள்.

அடுத்தவகையிலான பருவக்காதல் பள்ளிப்பருவத்துடன் முடிந்து போவது. நேரிலே காணும் வரை உருகி உருகி காதலித்து விட்டு பாடசாலை காலம் முடிந்து பிரிந்து சென்றதும் கவர்ச்சியும் முறிந்துவிடும். இத்தகைய பதின்மவயதுக்கவர்ச்சியால் கல்வியை தொலைத்தவர்களும் ஏராளம்.

Teenage Love

இதற்குரிய காரணம் பெரும்பாலானவர்களது கண்ணில் முதலில் படுவது எதிர்ப்பாலாரிடம் காணப்படும் தமக்கு பிடித்தமான குணாதிசயங்கள் மட்டுமே அதிலும் குறிப்பாக வெளித்தோற்றம். அதை மட்டும் விரும்பும் அவர்களால் தமக்கு பிடிக்காத குணாதிசயங்களும் அவர்களிடம் இருக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. அல்லது அவர்கள் புரிந்து கொள்ள முயல்வதில்லை. ஆனால் அந்த யதார்த்தம் கசக்கும் போது அவர்களுக்கிடையிலான கவர்ச்சியும் உடைந்துபோகிறது. இன்னொன்று பதின்மவயதில் ஏற்படும் திடீர் உள உடல் மாற்றங்களால் “என்ன பொண்ணுடா அவ” என்று நினைத்த அதே பெண்ணை பதின்மவயதை தாண்டி ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு வரும்போது “பொண்ணாடா அவ?” என்று நினைக்க தோன்றும். ஆனால் சத்தியமா இந்த ஞானம் எல்லாம் பதின்மவயதில் தோன்றுவதில்லை. அதை சொன்னால் பதின்மவயதில் ஏறப்போவதும் இல்லை

இவை எல்லாவற்றையும்விட மிகமுக்கியமான பிரச்சினை இளவயது கர்ப்பங்கள். இதுவும் இந்த வயதுக்கோளாறின் வெளிப்பாடுதான். பதின்மவயதில் தோன்றும் கவர்ச்சியை காதலாக கருதி ஒருவரையொருவர் முற்றுமுழுதாக நம்பி வரம்பு மீறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் வலிகளுடனேயே வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பதின்ம வயதுக்காலப்பகுதி காதலிக்க ஏற்ற காலப்பகுதியாக இருக்கலாம் ஆனால் கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதற்கு உள ரீதியாகவும் உடல்ரீதியாகவும் முற்றிலும் பொருத்தமற்றது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. நமது சினிமாக்களில் காட்டப்படுவது போல “கர்ப்பமா? கட்டுடா தாலிய.” என்று அறுகரிசிபோட மாட்டார்கள். சட்டத்தின் படி நடப்பவர்கள் உள்ளே போடுவார்கள். நம்மூரில் தர்மத்தின் படி நடந்தவர்கள் என்றால் “கர்ப்பமா? வெட்டுடா அவன.” என்று அறுத்து விடுவார்கள்.

ஆனால் நான் இதுவரையில் சந்தித்ததில் ஒரு சிலர் மட்டும் இந்த பதின்ம வயதுக்கவர்ச்சியை முறையான பாதையில் திருப்பி அதை காதலாக ஏன் கல்யாணமாகவே வெற்றி கண்டிருக்கிறார்கள். காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் எவருமே பதின்மவயதில் பறக்கும் பட்டாம்பூச்சியை நம்பி வாழ்க்கையை தொலைக்கவில்லை. அவர்களுடைய காதலுக்கு தொடக்கப்புள்ளி அந்த பதின்ம வயது கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அந்த புள்ளி மட்டுமே அவர்களது வாழ்க்கையாக இருந்ததில்லை. அவர்கள் அதை வெறுமனே எதிர்ப்பாலின கவர்ச்சி என்ற வட்டத்தை தாண்டி வந்து பருவவயதுக்குரிய உணர்ச்சிகளால் உந்தப்படும் காலத்தையும் கடந்து முறையாக வெற்றி கண்டிருக்கின்றனர்.

என்றைக்கு ஒரு ஆணோ பெண்ணோ தனது காதலியின் அல்லது காதலனின் குறைகளையும் நேசிக்கதொடங்குகிறார்களோ அன்றைக்குத்தான் அவர்கள் Made for each other. ஆனால் அந்த பக்குவம் பதின்மவயதில் மிகமிக அரிதாகவேயுள்ளது. இறுதியாக பதின்மவயதிலுள்ள எனது சகோதரர்களுக்கு.....
“உங்கள் காதல் உண்மையானது என்றால், அது காலம் கடந்து வாழும் என்றால் அதை பதின்ம வயது முடியும் வரை மறைத்து வைத்திருங்கள். பதின்ம வயதுக்காலம் முடிந்த பின்பும் உங்களுள் அந்த காதல் ஜீவித்துக்கொண்டிருந்தால் தாராளமாகவே அதை வெளிப்படுத்துங்கள். இது சுயமாக முடிவெடுக்கப்பழகும் காலமே தவிர அனைத்து முடிவுகளையும் சரியாகவே எடுக்கும் காலமல்ல”

Monday, June 18, 2012

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்

 
 
 
 
 
 
 
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..

... நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்.

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

Poker

முன்குறிப்பு-1:போக்கர் (Poker) ஒரு சூதாட்டம். சூதாடுவது எங்க பரம்பரையில யாருக்குமே பழக்கம் இல்லைன்னு நினைக்கிறவங்க அப்டிக்கா லெஃப்ட் எடுத்து போயிட்டே இருங்க.
முன்குறிப்பு-2:ஏற்கனவே போக்கர் விளையாடத் தெரிஞ்சவங்க ரைட் எடுத்துப் போய்க்கிட்டே இருங்க.

  1. போக்கர் ஒரு சீட்டாட்டம். ஒரே ஒரு கட்டு வச்சிட்டு ஆடுற ஆட்டம். இந்த ஆட்டம் ஆட என்ன என்ன தேவைன்னு முதல்ல பார்க்கலாம்.
  2. விளையாட ஆட்கள். குறைந்தது 4 பேராவது இருந்தாத்தான் சுவாரசியமா இருக்கும்.
  3. ஒரே ஒரு சீட்டுக்கட்டு. அதுல இருக்கிற ஜோக்கர் எல்லாம் எடுத்து எறிஞ்சிடுங்க. புதுக் கட்டா இருக்கிறது நல்லது. அட்டையோட பின் பக்கத்தை வச்சி என்ன கார்டுனு கண்டுபிடிக்கிற அளவுக்கு பழைய கட்டுகள் கதைக்காவாது.
  4. சிப்ஸ்.சைட் டிஷா வச்சிக்கிற சிப்ஸ் இல்லை. சில பல ஹாலிவுட் படங்கள்ல பார்த்திருப்பீங்களே.வட்ட வட்டமா ப்ளாஸ்டிக் வில்லைகளை ஒரு கையில சரக்க வச்சிக்கிட்டு டேபிள்க்கு நடுவுல வீசி வீசி எறிவாங்களே. அதுதான் சிப்ஸ். இதை ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு மதிப்பு(காசு மதிப்பு) வச்சிக்கணும்.
  5. பணம்.இதை Buy-Inனு சொல்லுவாங்க. மொத்த ஆட்டத்துக்கும் எவ்வளவு buy-inஅப்பிடின்னு முதல்லயே முடிவெடுத்துடுங்க. அந்தப் பணத்தை பொறுப்பா ஒருத்தர் வசூல் பண்ணி வச்சிக்கிட்டு (சிட் ஃபண்ட் நடத்துற நண்பர்கள் இருந்தா அவங்க கையில குடுத்துறாதீங்க) அதுக்கு சமமான சிப்ஸ் அவங்களுக்குக் குடுத்திரணும். எந்த ரவுண்ட் வரைக்கும் buy-in செய்யலாம்ங்கிறதையும் முடிவெடுத்துடுங்க.
  6. டீலர்.இது வழக்கமா ஃப்ரண்ட்ஸா விளையாடும்போது ரம்மில ஒவ்வொருத்தரா கலைச்சிப் போடுற மாதிரி செஞ்சிக்கலாம். கேஸினோவுக்கெல்லாம் போய் விளையாண்டிங்கன்னா அங்க டீல் செய்ய ஒருத்தர் இருப்பாங்க. அவங்க தான் ரூல்ஸ்படி நடக்கறீங்களான்னும் பார்த்துக்குவாங்க.
  7. ஒரு ஆட்டத்துக்கு மினிமம் பெட் எவ்வளவுங்கிறதையும் முடிவு செஞ்சிக்கணும்.


இதெல்லாம் போக சரக்கு வச்சிக்கிறதும் வச்சிக்காததும் அவங்க அவங்க இஷ்டம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை ராத்திரி வீட்டம்மணிங்க எல்லாம் தூங்கின பிற்பாடு சரக்கை சரிச்சிக்கிட்டே விளையாட ஏத்த விளையாட்டு போக்கர்.

இப்ப எப்பிடி விளையாடுறதுன்னு பார்ப்போம். முதல்ல சீட்டுக்கட்டை விரிச்சி வைச்சி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சீட்டு எடுக்கணும்.யார் பெரிய சீட்டு எடுக்கறாங்களோ அவங்க தான் ஃபர்ஸ்ட் ரவுண்டுல டீலர். எடுத்த சீட்டு வரிசைப்படி உக்காந்துக்கணும். டீலருக்கு அடுத்து இருக்கிற ஆள் ஸ்மால் ப்ளைண்ட்(Small blind), அவருக்கு அடுத்து இருக்கிறவர் பிக் ப்ளைண்ட் (Big Blind).

ஸ்மால் ப்ளைண்ட்: ஒரு ஆட்டத்துக்கு மினிமம் பெட் எவ்வளவோ அதுல பாதியை இவர் கண்டிப்பா கட்டியே ஆகணும். சீட்டு என்னன்னு பார்க்கிறதுக்கு முன்னாடியே இவர் கட்டியாகணும்.
பிக் ப்ளைண்ட்: மினிமம் பெட் முழுக்க இவர் கண்டிப்பா கட்டியே ஆகணும். இவரும் சீட்டைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே கட்டணும்.

இப்ப டீலர் ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு ரெண்டு சீட்டு போடுவாரு. ரம்மி மாதிரியே ஒவ்வொரு சீட்டாத்தான் போட்டுட்டு வருவார்.ஸ்மால் ப்ளைண்ட்ல ஆரம்பிச்சி, டீலர்ல முடிக்கணும். இப்பவே எல்லாரும் அவங்களுக்கு வந்திருக்கிற சீட்டைப் பார்த்துக்கலாம்.

அடுத்ததா, பிக் ப்ளைண்டுக்கு அடுத்து இருக்கிற ஆட்டக்காரர், இந்த ரவுண்டுல கலந்துக்கிறதா இல்லையான்னு முடிவெடுப்பாரு.கலந்துக்கிறதா இருந்தா குறைந்த பட்சம் மினிமம் பெட்டைக் கட்டணும். அதுக்கு மேலயும் கட்டலாம். விளையாட விரும்பலைன்னா ஃபோல்ட் (fold)னு சொல்லி கார்டைக் காட்டாமலே டீலர்கிட்ட குடுத்துரணும்.
இது மாதிரி ஒவ்வொருத்தரா செஞ்சிட்டே வருவாங்க. ஒரு வேளை யாராவது மினிமம் பெட்டுக்கு மேல (இது குறைந்த பட்சம் மினிமம் பெட் அளவுக்கு இருக்கணும்) கட்டினா (அதை raiseனு சொல்லுவாங்க) அடுத்த ஆட்டக்காரர்ல இருந்து முந்தின ஆட்டக்காரர் வரைக்கும் அந்தத் தொகையை மேட்ச் பண்ணனும்.

இப்ப யாரும் ரெயிஸ் பண்ணலைன்னு வச்சிக்குவோம். பிக் ப்ளைண்ட் (இவர் தான் முதல்லயே மினிமம் பெட் கட்டினவர்)க்கு ரெண்டு சாய்ஸ் உண்டு. ஒண்ணு தொகையை ரெய்ஸ் பண்ணலாம். அல்லது செக் (Check) அப்பிடின்னு சொல்லலாம்.செக்னு சொன்னா, டீலருக்கு வேலை.

இப்ப டீலர் என்னா செய்யணும்னா,எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு சீட்டு போட்டது போக மீதி இருக்கிற சீட்டுக்கட்டுல மேல இருக்கிற சீட்டை எடுத்து கடைசியில வச்சிக்கிட்டு – இதை burnனு சொல்லுவாங்க, அதாவது எரிக்கிறது – அடுத்த மூணு கார்டை திருப்பிப் போடுவார் . இதுதான் ஃப்ளாப் (flop). இப்ப நம்ம கையில இருக்கிற ரெண்டு சீட்டையும் டேபிள் மேல இருக்கிற மீதி மூணு சீட்டையும் மேட்ச் செஞ்சி பாத்துட்டு வின்னிங்க் காம்பினேஷன் (இதை அப்புறம் பார்ப்போம்) வரும்னு நினைச்சா மேல பெட் கட்டலாம். அதாவது ரெய்ஸ் பண்ணலாம்.

முதல் ரெய்ஸ் பண்ற வாய்ப்பு ஸ்மால் ப்ளைண்டுக்கு (அவர் தானப்பா ஃபர்ஸ்ட் சீட்டை வாங்கினாரு). ரெய்ஸ் பண்ண விரும்பலைன்னா செக்னு சொல்லிடலாம். வேற யாராவது ரெய்ஸ் பண்ணா அதை எல்லாரும் மேட்ச் பண்ணனும். இது கதைக்காவாதுன்னா ஃபோல்ட் பண்ணிடலாம். ஆனா இதுவரைக்கும் கட்டின பெட் வடை போச்சுதான்.

எல்லோரும் மேட்ச் பண்ணதும், அடுத்த கார்டை burn செஞ்சிட்டு, அதுக்கு அடுத்த கார்டை திருப்பிப் போடுவாரு. இதுக்குப் பேரு டர்ன் (turn). மறுபடி மேல சொன்ன மாதிரி எல்லாருக்கும் இன்னுமொருமுறை ரெயிஸ் செய்யவோ இல்லை checkனு இருக்கிற தொகையையே தொடரவோ வாய்ப்பு.

நிற்க. இடையிலயே எல்லாரும் ஃபோல்ட் செஞ்சிட ஒருத்தர் மட்டும் மிச்சமிருக்கவும் வாய்ப்பு இருக்கு. அந்தக் கட்டத்துல மிச்சமிருக்கிற ஆள் ஜெயிச்சவராகிடுவார்.
மண்டை சுத்துதா? எத்தனை பேரு மங்காத்தாவே ஆடிக்கிறோம் சாமின்னு கிளம்பிட்டீங்கன்னு தெரியலை. யாராவது இன்னும் இருந்தீங்கன்னா தொடர்றேன்.

இந்த ரவுண்ட் பெட் கட்டினதும்,அடுத்த கார்டை burn செஞ்சிட்டு, அதுக்கு அடுத்த கார்டை திருப்புவாரு. இதுக்குப் பேரு ரிவர் – rivar. இதுக்குப் பிறகு இன்னொரு ரவுண்டு ரெயிஸ், செக்னு ஓடும்.

கடைசியா எல்லாரும் கார்டை திருப்பிக் காட்டணும். யாரு ஜெயிச்சாங்கன்னு பார்த்து அவங்க பெட் கட்டின (இதை பாட் மணின்னு சொல்லுவாங்க)எல்லா காசையும் (சிப்ஸாத்தான்) வழிச்சிக்குவாங்க.

இப்ப யாரு ஜெயிச்சான்னு எப்பிடி கண்டு பிடிக்கிறது. (அடங்கொன்னியா நான் ஜெயிப்பேனான்னு தெரியாம எப்பிடிடா பெட் கட்டுறது?இதையில்லடா மொதல்ல சொல்லியிருக்கணும்ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது). நம்ம கையில இருக்கிற ரெண்டு கார்டு (அல்லது ரெண்டுல ஒரு கார்ட்) + டேபிள்ல இருக்கிற அஞ்சுல மூணு கார்ட் (அல்லது நாலு கார்ட்) சேர்த்து வின்னிங் காம்பினேஷன்ல ஒண்ணா இருக்கணும். அதுலையும் ஒரு காம்பினேஷன் இன்னொரு காம்பினேஷனை பீட் பண்ணும். ஆக இருக்கிறதுலையே கூடின காம்பினேஷனா இருந்தா நாம தான் வின்னர்.

என்ன என்ன வின்னிங் காம்பினேஷன்னு பார்க்க முன்னாடி, suit அப்பிடின்னா, ஒரே பூ( அதாவது க்ளாவர், ஹார்ட்ஸ், ஸ்பேட், டைஸ் இது நாலுல ஒண்ணு).
ஃப்ளஷ் – Flush – அப்பிடின்னா ஒரே பூவுல 5 கார்ட்னு அர்த்தம்.
ஸ்ட்ரெயிட் – Straight – அப்பிடினா ஒரு வரிசையில (2,3,4,5,6 அல்லது 9,10,J,Q,K) இந்த மாதிரி இருக்கிற 5 கார்ட்ஸ். (JQKA2 அப்பிடின்னு wrap around பண்ணக்கூடாது. கரெக்ட் ரம்மி மாதிரியே தான்).
பெர் – pair – ஒரே நம்பர்ல ரெண்டு கார்ட்.
Three of a kind – ஒரே நம்பர்ல மூணு கார்ட்
Four of a kind – ஒரே நம்பர்ல நாலு கார்ட்
இதெல்லாம் புரிஞ்சதா? இப்ப எது பெரிய கை எது சின்ன கைன்னு பார்ப்போம்.

< !--[if !supportLists]-->1. <!--[endif]-->ராயல் ஃப்ளஷ் – Royal Flush –அதாவது ஒரே பூவுல 10 J Q K A னு வச்சிருக்கிறது.
< !--[if !supportLists]-->2. ஸ்ட்ரெயிட் ஃப்ளஷ் –Straight Flush – அதாவது ஒரே பூவுல அஞ்சு நம்பர் வரிசையா வர்றது.
< !--[if !supportLists]-->3. <!--[endif]-->Four of a kind
< !--[if !supportLists]-->4. Full House – அதாவது ஒரு நம்பர்ல மூணு கார்டும், இன்னொரு நம்பர்ல ரெண்டு கார்டும் (ஒரு pairம் ஒரு three of a kindம்)
(என்னது அஞ்சும் ஒரே நம்பரா?? பாஸ் நீங்க போய் பாதியில விட்டுட்டு வந்த தட்டாங்கல்லை கண்டினியூ பண்ணுங்க ப்ளீஸ்)
< !--[if !supportLists]-->5. Flush
< !--[if !supportLists]-->6. Straight
< !--[if !supportLists]-->7. Three of a kind (இதுல ரெண்டு பேரு three of a kind வச்சிருந்த பெரிய நம்பர் யார் வச்சிருக்காங்களோ அவங்க தான் ஜெயிச்சவங்க)
< !--[if !supportLists]-->8. Two pairs (ரெண்டு நம்பர்ல ரெண்டு ரெண்டு கார்ட். இதுலையும் ரெண்டு பேரு Two pairs வச்சிருந்தா பெரிய நம்பர் தான் ஜெயிக்கும்)
< !--[if !supportLists]-->9. Pair – இதுலையும் ரெண்டு பேரு ஜோடி வச்சிருந்தா பெரிய ஜோடி தான் ஜெயிக்கும்.
< !--[if !supportLists]-->10. High Card யாருமே மேல இருக்கிற 9 காம்பினேஷன்ல எதுவுமே வச்சிருக்கலைன்னா,இருக்கிறதுலையே பெரிய கார்டு யார் கையில இருக்கோ அவங்க தான் ஜெயிச்சவங்க. (இது ரொம்ப அரிதாத்தான் நடக்கும்).

இப்ப ஒரு எக்ஸாம்பிள் பார்ப்போம். நாலு பேரு இருக்காங்க. அவங்க அவங்க கையில கார்ட் இருக்கு.
முதல் ஆள் கையில 2§ 2©
ரெண்டாவது ஆள் கையில 8¨8§
மூணாவது ஆள் கையில A©8©
நாலாவது ஆள் கையில 4ª 5ª
டேபிள் மேல Aª 2ª 3ª A¨ 8ª
இப்போ முதல் ஆள் – ஃபுல் ஹவுஸ் மூணு 2 & ரெண்டு A.
இரண்டாவது ஆள் – ஃபுல் ஹவுஸ் – மூணு 8 & ரெண்டு A 8, 2ஐ விட பெருசுங்கிறதால முதல் ஆள் அவுட்டு
மூணாவது ஆள் – ஃபுல் ஹவுஸ் – மூணு A & ரெண்டு 8. A, 8ஐவிட பெருசுங்கிறதால ரெண்டாவது ஆளும் அவுட்டு.
நாலாவது ஆள் – ஸ்ரெட்யிட் ஃப்ளஷ் – A, 2, 3, 4, 5 இந்த வரிசை, ஒரே ஸூட் ல இருக்கிறதால மூணாவது ஆளும் அவுட்டு. இவர் தான் ஜெயிக்கிறார்.
(குறிப்பு:மேல உள்ள கேம் Casino Royale படத்துல வர்ற போக்கர் டோர்னமெண்ட்டோட கடைசி கேம். பாண்ட் கையில Straight Flush தான் இருக்கும்)

இதுல எல்லாரும் இப்பிடி உண்மையா விளையாடணும்னு அர்த்தம் இல்லை. யாராவது ரெண்டாவது ரவுண்ட்லயேBluff செய்வாங்க. அதாவது, அவங்க கையில பெரிய கார்ட் எதுவும் இருக்காது. ஆனாலும் மத்தவங்களை பயமுறுத்த பெரிய தொகையைக் கட்டுவாங்க. மத்த ப்ளேயர்ஸ் பயந்து ஃபோல்ட் செஞ்சிட்டுப் போயிருவாங்க. அப்ப எல்லாரும் அதுவரைக்கும் கட்டுன பெட் எல்லாம் இவங்களுக்குத்தான்.இப்படி எல்லாரும் ஃபோல்ட் செஞ்ச பிறகு ஜெயிச்சோம்னா நம்ம கையில இருக்கிற கார்டைக் காட்ட வேண்டியதில்லை. நீங்க ஒரு வேளை Bluff செஞ்சிருந்தீங்கன்னா காட்டாம இருக்கலாம். காட்டினீங்கன்னா அடுத்த வாட்டி bluff பண்ணும்போது நம்ப மாட்டாங்க. (bluff செஞ்ச பிறகு காட்டுறதிலையும் ஒரு அட்வாண்டேஜ் இருக்கு. அடுத்த வாட்டி நிஜமாவே நல்ல கார்ட் வச்சிருக்கும்போது நீங்கBluff செய்யறதா நினைச்சி உங்களை மடக்க பெட்டை நல்லா ஏத்தி விடுவாங்க. நீங்க double bluff செய்யலாம்)

இந்த விளையாட்டுல எதிராளிகளோட ரியாக்‌ஷன்ஸை கவனிக்க வேண்டியது முக்கியம். நம்மில பலருக்கு பொய் சொல்லும்போது வியர்க்கும், அல்லது கை லேசா நடுங்கும், இல்ல மத்தவங்களை கண்ணோட கண் பார்க்க பயப்படுவாங்க. இதையெல்லாம் நோட் பண்ணனும். உண்மையிலேயே நல்ல கை வந்திருச்சின்னா,அவங்களை அறியாமலே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாங்க (excited). அதிகப்படியா பெட் கட்டுவாங்க.அப்ப ஜாக்கிரதையா ஃபோல்ட் செஞ்சிட்டோம்னா நம்ம காசு பொழைக்கும். நாமும் பெரும்பாலும் நம்ம ரியாக்‌ஷனைக் காட்டிக்காம இருக்கிறது நல்லது. எப்பவும் ஒரே அளவுல பெட் கட்டுறது,அடிக்கடி ஃபோல்ட் பண்றது இதெல்லாம் நம்மை ஒரு ஜென்யூன் ப்ளேயராக் காட்டும். அப்பப்பbluff செஞ்சிக்கலாம்.

சரி ஃப்ரண்ட்ஸ் இல்லை, இருந்தாலும் காசு கட்டி ஆட விரும்பலைன்னு சொல்றவங்களும் இருப்பாங்க.உங்களுக்காகத்தான் Facebook மாதிரி சமூகத் தளங்கள்ல இலவசமா poker விளையாட்டுகள் நடத்துறாங்களே?பிற நண்பர்களோட சேர்ந்து அங்க போய் போக்கர் விளையாடுங்க.

கடைசியா,போதையோ சூதோ, உங்களை சுலபமா அடிமைப் படுத்திடும். கார்டை கையில பிடிக்கிறது எப்பிடின்னு உங்களுக்குத் தெரியிறது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் கார்டை எப்பக் கீழ போடுறதுன்னு தெரிஞ்சிக்க வேண்டியது. ஆகவே விளையாடுங்க, எஞ்சாய் பண்ணுங்க. ஆல் த பெஸ்ட்.