Thursday, March 12, 2009

கடந்தகால நினைவு




ஸ்நேகிதியே
எங்கோ ஓர்
பௌர்ணமி நாளில்
தூங்காத இரவுகளில்
நீங்காத நினைவுகளாய்
என்னுடன் உறவாடும்
நம் ஸ்நேகம்

முதலில் பார்த்தும்
மலராய் சிரித்ததும்
அப்போது
இன்பச்சாரலை
அள்ளி வீசினாலும்....

பின்னாளில் வரும்
இடிமழையாய்
நம் பிரிவை
அந்நாளில் நாம்
உணரவே இல்லை

பிரிவெனும் பேரிடி
தாக்கிடும் என்று
தெரிந்திருந்தும்
மலை எதிர்க்கும்
மலர்களாய் நாம்
மனங்கிறங்கி லயித்திருந்தோம்

பாட வேளையில்
பகிர்ந்து கொண்ட
பசுமை நினைவுகள்
இன்னும் என்னுள்
இறந்து விடாமல் ... என்னை
உறங்கவும் விடாமல்

விளையாட்டு பேச்சும்
விஷமக் குறும்பும்
இன்றும் எதிரொலியாய்
இங்கும் ஒலிக்குதடி

கொத்திப் பசியாற்றும்
மரங்கொத்திப் பறவையாய்
என் மனங்கொத்தித் தின்னும்
சிநேகப் பறவையடி நீ...!

எங்கோ ஓர்
இருண்ட இருளில் இரையும்
சுவர்க்கோழி போல்
இம்சிக்கிறது ...நம்
கடந்தகால நினைவு

நீயுதிர்த்த வார்த்தைத் துளியில்
நிறைவுபெற்ற
நீர்நிலையாய் நம் நட்பு
அதில் நீந்திக் களிக்கிறது
என் நினைவு

மறவாதே என்றாயே
என் மனம
உன் நினைவுப் பச்சைகளை
அல்லவா
சுமந்து கொண்டிருக்கிறது ..

No comments:

Post a Comment