Thursday, September 03, 2009

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன?

ஒரு 21 வயசு பொண்ணு [ஜொள்ளர்ஸ் வழியாதிங்க] தனியா ஒரு ஊரில இருந்து இன்னொரு ஊருக்கு காரில போய்ட்டு இருந்திருக்கு. இருட்டின நேரம், காத்தும் பலமா அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. அந்த நேரம் பார்த்து கார் டக் டக் டக் டக் என்று சத்தம் போட்டுட்டே நின்னிட்டுது. மழை வேற...தூரத்தில ஒரு வீடு தெரிஞ்சுது. சரி அங்க போய்ட்டு உதவி கேக்கலாம்னு சொல்லிட்டு அந்த பொண்ணு வீட்டை போய் தட்டிடிச்சு. ஒரு நடுத்தர வயதுள்ள கணவன், மனைவி கதவை திறந்தாங்க. நடந்தது தெரிஞ்சதும், சரி எங்க கூடவே தங்கிட்டு காலைல போகலாம் அப்படின்னாங்க. வீடு ரொம்ப பெரிசா இருந்திச்சுது. தம்பதிகளை தவிர வேற யாருமே கண்ணில படலை. அந்த இரவு நேரத்தில கூட நல்ல சாப்பாடு பரிமாறினாங்க அந்த பொண்ணுக்கு. மேல போய் தூங்கிக்கோ ஆனா தெற்கால இருக்கிற அறை பக்கம் போக வேணாம் அப்படி சொன்னாங்களாம். இந்த பொண்ணும் சரின்னு சொல்லிட்டு போய் தூங்கிடிச்சு. இரவு 2மணி போல தாகம் எடுத்ததும், தண்ணி எங்க இருக்கும்னு தேடி போகும் போது சரி அந்த அறையில அப்படி என்ன இருக்குன்னு சாவி போடுற இடத்தில பார்த்திருக்கு. அறையில ஒரு சின்ன பொண்ணு சுவரை பார்த்தபடி உட்கார்ந்திருக்கு. அடப்பாவிகளா நல்லவங்க போல நடிக்கிறாங்க ஆனா ஒரு சின்ன பொண்ணை அடைச்சு வச்சிருக்காங்களேன்னு நினைச்சிட்டே தூங்க போய்ட்டாங்க. மறுபடி 4 மணி போல கழிவறைக்கு போக வேண்டி வந்திடிச்சு. சரி எழுந்திட்டம் அந்த சின்ன பொண்ணு என்ன தான் பண்ணுதுன்னு பார்க்கலாமேன்னு நினைச்சிட்டு மறுபடி சாவிதுவாரத்தால பார்த்திருக்கா. அப்போ எதுவுமே தெரியலை. சிவப்பு நிறம் மட்டும் தெரிஞ்சிருக்கு. அட முன்னாடி பார்க்கும் போது இருந்த சின்ன பொண்ணு எங்கேன்னு நினைச்சிட்டே தூங்கா போய்ட்டா.காலை நேரம்...தம்பதிகள் நல்ல உணவு சமைச்சு பரிமாறிட்டு இருக்காங்க. நல்லா தூங்கினியாம்மான்னு மனைவி கேட்கிறாங்க. நல்ல தூக்கம், தங்க வச்சு உணவும் தந்ததுக்கு ரொம்ப நன்றி...மேல இருக்கிற ஒரு அறைக்கு ஏன் சிவப்பு நிறம் பூசி இருக்கிங்கன்னு இந்த பொண்ணு கேட்டிச்சாம். இல்லையே எங்க வீட்டில எல்லா சுவருக்கும் வெள்ளை நிறம் தானே அடிச்சிருக்கோம். சிவப்பு நிறம்னால எங்களுக்கு எங்க பொண்ணு நினைவு தான் வரும். ஆண்டவன் எங்க பொண்ணை சின்ன வயசிலயே பறிச்சுகிட்டான்மா. ஹிம்ம் சொல்ல மறந்திட்டமே எங்க பொண்ணோட ஒரு கண்ணு சிவப்பா இருக்கும்மா........

No comments:

Post a Comment