Sunday, January 23, 2011

ஒரு எச்சரிக்கை!


என நண்பர் என்னையே தூக்கிப்போட்டு தாண்டி சத்தியம் செய்தமையால் வேறு வழியின்றி படத்திற்கு செல்ல நேர்ந்தது. படத்தின் கதையென்னவோ வசீகராவில் நாலு ஸ்பூன், காதலுக்கு மரியாதையில் ரெண்டு ஸ்பூன், துள்ளாத மனமும் துள்ளுமிலிருந்து ஒரு சிட்டிகையென இது வரை விஜய் நடித்த நல்ல படங்களின் கதைகளையே கலந்து கட்டி ரீமேக்கியிருப்பது தெரிந்தது. பாவம் விஜய் இதுவரை தெலுங்கு மலையாள படங்களை மட்டுமே ரீமேக்கி வந்தவர், இப்போது அவர் படங்களை அவரே நடித்து ரீமேக்குகிற துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருப்பது சன்பிக்சர்ஸின் சதியாக இருக்கலாம்.

படத்தின் கதை இரண்டாபாதியின் இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. அதுவும் அடுத்த சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அதற்குபின்னும் தேவையில்லாத காட்சிகளால் படம் நீண்டுகொண்டே போவது நல்ல தூக்கமாத்திரை.

படத்தின் பாடல்களில் யாரது யாரது.. தவிர்த்து மற்ற எல்லாவுமே தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட டப்பிங் பாடல்களின் தரத்தில் அருமையாக இருந்தன. 

ஒரு பாடல் காட்சியில் துணிவே துணை ஜெய்சங்கர் கெட்டப்பில் தலையில் குருமாவை கொட்டியபடி விஜய் வருகிறார்.  தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.
படம் முடிந்த பின் நண்பரிடம் கேட்டேன் படம் எப்படி பாஸ்.. ஆஹா சூப்பர்.. அழுதுட்டேன் என்றார். தியேட்டரில் சில இளசுகளோ என்ன இழவு படம்டா என நொந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.புரட்சி வேட்கை கொண்டவர்களும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்களும் காவலனை ஒரு முறை பார்க்கலாம். 

No comments:

Post a Comment